சிங்கப்பூர் நாம்தமிழர் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எதனால்? – நாம் தமிழர் கட்சி விளக்கம்

பதிவு இணையத்தளம் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் பெயரினை பயன்படுத்தி நிதி சேகரித்தார்கள் என்ற காரணத்திற்காக சிங்கப்பூரில் இருந்து நாம் தமிழர்கட்சி உறுப்பினர்கள் ஐவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு இணையத்தில் வந்துள்ள செய்தியினை முழுமையாக மறுத்து நாம்தமிழர் கட்சியி மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்…

நாம் தமிழர் கட்சியின் சிங்கப்பூர் பொறுப்பார்களாக செயல்பட்ட மகாலிங்கம், காசி, விஜயகுமார் ஆகியோர் கடந்த வெள்ளியன்று சிங்கப்பூர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பில் நீங்கள் இங்கிருந்து செயல்பட்டது தவறு என்று தெரிவிக்கப்பட்டனர். எங்கள் தேசம், வேல்வீச்சு புத்தகம் வாங்கி விநியோகித்ததும், உறுப்பினர் அட்டை அடித்து வாங்கித்தந்ததும் 2 குற்றச்சாட்டுகள். இரண்டு நாட்கள் இதை தவிர வேறு ஏதும் குற்றசாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் இந்தியா திருப்பியனுப்பட்டனர்.

திருப்பியனுப்பட்ட நாம் தமிழர் தம்பிகள் அனைவரும் கிராமத்திலிருந்து குடும்பபாரம் சுமக்க கூலிவேலைக்கு சிங்கப்பூர் சென்றவர்கள். இன்னமும் அவர்கள் அங்கே செல்வதற்கு வாங்கப்பட்ட கடனை அடைக்க முடியாதவர்கள். அவர்கள் திருப்பியனுப்பட்ட செய்தி அறிந்து அவர்களின் குடும்பங்கள் அடுத்து என்னசெய்வதென்றறியாமல் கவலையில் உள்ளனர். நாம் தமிழர் கட்சியை ஆதரித்த ஒரே காரணத்திற்காக அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டதை எண்ணி அண்ணன் சீமானும் கட்சியினரும் கவலையில் உள்ளோம்..

உண்மை இவ்வாறிருக்க புலிகளுக்காக நிதி வசூலித்த நாம் தமிழர் இயக்கத்தினர் என்று மனசாட்சியே இல்லாமல் செய்திவெளியிட்டுள்ளது பதிவு இணையதளம்.. இது மிகுந்த கண்டனத்திற்குரியது.. செய்தியை இருப்பக்கமும் விசாரித்து வெளியிடவேண்டும் என்ற அடிப்படை அறமில்லாமல் வெளியிடப்பட்ட அந்த செய்தியை உடனடியாக நீக்கி வேண்டும் என்று கோருகிறோம். இந்த செய்திக்கு சம்பந்தமே இல்லாத படத்தை தவறாக வெளியிட்டதற்கு மன்னிப்பை எதிர்பார்க்கிறோம்..

இச்செய்தியை பற்றிய விவரம் அறியத்தர நாங்கள் தயாராய் இருக்கிறோம்.. பாதிக்கப்பட்டவர்களிடம் நீங்கள் நேரடியாக பேட்டி எடுக்க ஏற்பாடும் செய்து தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

Leave a Response