தியாகத்தின் அடையாளம் இரட்டைமெழுகுவர்த்தி, அதற்கே வாக்களியுங்கள் – சீமான் வேண்டுகோள்

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல்.

இதுதொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் இனம் எழுச்சிபெறுவதற்கு மாற்று அரசியலை உருவாக்கவேண்டிய காலகட்டம் ஏற்பட்டுள்ளது.இனம், மொழி, கலை இலக்கியம்,பண்பாடு, சிதைக் கப்பட்டுள்ளது. பாரம்பரிய வேளாண்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.

நம் கண்முன்னே கொத்துகொத்தாக இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் உறவுகள்கொன்று குவிக்கப்பட்டனர். அதனை கேட்பதற்குகூட நாதியில்லாமல் இருக்கிறோம். தாய்த் திருநாட்டில் நிலம்,காட்டு வளம், கனிமவளம் ஆகிய அனைத்தையும் காவுகொடுத்து நிற்கிறோம். சொந்த நிலத்தில் வந்தவரை வாழவைத்தது சரிதான். ஆளவைத்து அடிமைப்பட்டு கிடந்ததாலேயே இன்று உரிமைகளை இழந்து நிற்கிறோம்.

கடந்த 50 ஆண்டு காலம் ஆண்ட ஆட்சியாளர்களால் கச்சத்தீவைப் பறி கொடுத்தோம், முல்லைப் பெரியாறு, காவிரி நதி நீர் பிரச்சினையில் நமது உரிமைகளை இழந்தோம்.அணு உலை, மீத்தேன், கெயில் எரிவாயு திட்டங்களால் பாதிப்புகளையும், துன்பங்களையும் அனுபவித்து வருகிறோம். துயரங்களும், துன்பங்களும், நம்மைச் சுற்றிசுற்றித் துரத்திக் கொண்டிருக்கின்றன.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பேசியவர்கள், எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் என்கிற நிலையை ஏற்படுத்திவிட்டனர். தாய் மொழியை மறந்த இனம், உலக வரலாற்றில் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

அதனைமறந்து அக்கறையின்றி நாம் இருக்கிறோம். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இனமான தமிழ்இனம்,50 ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தமிழர் மீட்சியே தமிழர் எழுச்சிஎன்பதுதேவநேயப் பாவாணரின் சொல். இதுபற்றி யாரும் சிந்திப்பதே இல்லை.

இதனால் இன்று தமிழன் 5–க்கும், 10–க்கும் அரிசிக்கும் கையேந்திநிற்கிறான்.இந்த இழி நிலையை மாற்றவேண்டும். லஞ்சம், ஊழல், மதுவை கொண்டு வந்தவர்களே இன்றுஅதனை ஒழிப்போம் என்கிறார்கள்.

இது தமிழினத்தின் வளர்ச்சிக்கு பேராபத்து.பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் லஞ்சம், ஊழல் என்கிற பேச்சே இல்லாமல்இருந்தது. ஆனால் இன்று அப்படியா இருக்கிறது.எல்லாத் திசைகளிலும் லஞ்சமும்ஊழலும்புரையோடிக் கிடக்கிறது.இதுபோன்ற ஒரு சூழலில் அரசியல் விடுதலைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிஉள்ளது.

அதிகாரம் மிக வலிமையானது. துன்பப் பூட்டுகளுக்கான சாவி ஆட்சி அதிகாரமேஎன்று அண்ணல் அம்பேத்கர் கூறுவார்.

யானை வலிமை மிக்க மிருகம்.ஆனால் அது தனது வலிமைதெரியாமல் மண்டியிட்டுமற்றவர்களைமுதுகில் ஏற்றிக் கொள்வது போலவலிமைமிக்க இந்த இனம்வந்தவர்களையெல்லாம் தனது முதுகில் ஏற்றி அடிமைப்பட்டு கிடப்பதாக தெய்வத்திருமகனார் முத்து ராமலிங்கத் தேவர் கூறுவார்.

இதனை புரிந்து தமிழர் அரசை நிறுவநாம் பாடுபடவேண்டும்.ஆட்சிக்குவந்தால் அதைச் செய்வோம், இதைச்செய்வோம் என்று கூறுபவர்கள் 50 ஆண்டுகளாகச் செய்யாதது ஏன்? இத்தனை ஆண்டுகளாக எதையும் செய்யாதவர்கள் இதற்கு மேலா செய்யப்போகிறார்கள்?

தமிழ் இனம் இன்னுமா இதனை நம்ப வேண்டும். இன்னும் எத்தனை காலம்நம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.தன்மானத்தை இழந்து தமிழன் வாழ்வது தலைகுனிவாக உள்ளது. தமிழர்களாகிய நாம்அனைவருமேசிந்தித்து வாக்களிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தமிழக அரசியலைமாற்றி அமைக்க இதுவே நமக்கான வாய்ப்பு.இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

எனது தாய்த் தமிழ் உறவுகளே,தாய்மார்களே படித்த இளைஞர்களே உழைக்கும்வர்க்கமே,இனத்தின் விடுதலைக்காக சிந்தித்து வாக்களியங்கள்,. நீங்கள்செலுத்தப்போகும் ஒவ்வொரு வாக்கும் உங்களது எதிர்கால வாழ்க்கை என்பதை மனதில்பதித்து இந்தத் தேர்தலில் செயல்படுங்கள்.

தன்னை உருக்கி வெளிச்சம் தரும் தியாகத்தின் அடையாளமாக திகழும் இரட்டை மெழுகுவர்த்திசின்னத்தில் நாம் தமிழாய் இணைந்து அனைவரும் வாக்களிக்க வேண்டுஎன்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Response