திருகோணமலையில் சிங்களர்கள் அட்டூழியம், தமிழ் விவசாயிகளின் நிலங்களைத் தர மறுப்பு

இலங்கையின் கிழக்கே தமிழ்-சிங்கள விவசாயிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இன்று (ஏப்ரல் 22) பலமணி நேரம் அங்கு பதற்ற சூழல் நிலவியுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆனாலும், கிழக்கு மாகாணத்தில் காணி உரிமை இன்னும் பெரிய பிரச்சனையாகவே உள்ளது என உள்ளூர்வாசிகள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.

காணி பிரச்சினைகள் காரணமாக மூவின மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக உரசல்கள் ஏற்படுகின்றன.

அவ்வகையில் வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டம் மூதூர் படுகாடு பகுதியிலும் தமிழ்-முஸ்லிம் விவசாயிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அங்கு பலமணி நேரங்கள் அமைதியற்ற சூழலை காவல்துறையினரின் கவனத்துக்கு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் கொண்டுசென்ற பின்னர், அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பை சமாதானப்படுத்தியுள்ளனர்.

போரின் காரணமாக விவசாயம் செய்யமுடியாமல் போன காணிகளின் உரிமைகளை தமிழ் மற்றும் சிங்கள விவசாயிகள் கோருவதால் அங்கு பிரச்சனை ஏற்பட்டது எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.

இதனால் தமது காணி உரிமைகள் மறுக்கப்படுவதாக தமிழ் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்துக்கொண்டால் திருப்பித் தரவேண்சியதில்லை என்று சிங்களர்கள் நினைப்பதாலும் அவர்களுக்கு சிங்களக்காவல்துறை ஆதரவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Response