திமுக கூட்டணிக்கட்சிகளுக்கு இதுவரை 66 தொகுதிகள் ஒதுக்கீடு – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணிக்கட்சிகள் தொகுதிப் பங்கீடு வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

அந்தக் கூட்டணியில், காங்​கிரசு 28, சிபிஐ 5, சிபிஎம் 5, மதி​முக 4, முஸ்​லிம் லீக் 2, மமக 2, கொமதேக 2 என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,நேற்று விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகின.

நேற்று காலை சென்னை அறி​வால​யத்​தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா​லின் மற்​றும் விசிக தலை​வர் திரு​மாவளவன் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி, விசிகவுக்கு 6 தனித்தொகு​தி​கள், 2 பொதுத் தொகு​தி​கள் என மொத்​தம் 8 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

ஒப்​பந்​தத்​துக்​குப் பின் செய்​தி​யாளர்​களிடம் திரு​மாவளவன் கூறிய​தாவது….

எங்​கள் கட்​சி​யினர் இரட்டை இலக்​கத் தொகு​தி​கள் மற்​றும் ஒரு மாநிலங்​களவை உறுப்​பினர் பதவியைக் கோரினர். இருப்​பினும், மதவாத மற்​றும் சாதிவெறி சக்​தி​களை வீழ்த்தவேண்​டும் என்ற கூட்​ட​ணி​யின் நன்​மை​யைக் கருதி 8 தொகு​தி​களுக்கு உடன்​பட்​டுள்​ளோம்.விசிக ஒரு அங்​கீகரிக்​கப்​பட்ட மாநிலக்கட்சி என்​ப​தால்,எங்​கள்
சொந்​தச்சின்​னமான பானை சின்​னத்​திலேயே போட்​டி​யிடு​வோம்.திமுக வழங்​கி​யுள்ள இந்த இடங்​கள் இடது​சாரி அரசி​யலைப் பாது​காப்​ப​தற்​கான அங்​கீ​காரம்.
புதுச்​சேரி​யில் கடைசிநிமிடம் வரை கூட்​டணி உறுதி செய்​யப்​ப​டாத​தால்,முன்​னெச்​சரிக்​கை​யாக ஊசுடு,நெட்​டப்​பாக்​கம் மற்​றும் உழவர்​கரை ஆகிய 3 தொகு​தி​களில் விசிக வேட்​புமனு தாக்​கல் செய்​துள்​ளது.எங்​களுக்கு ஒரு தொகுதி ஒதுக்​கப்​பட்ட நிலை​யிலும், அங்கு காங்​கிரசு வேட்​பாளர்​கள் மனு​வைத் திரும்​பப்பெறத் தயா​ராக இல்​லை.திமுக போட்​டி​யிடும் சில இடங்​களி​லும் காங்​கிரசு வேட்​பாளர்​கள் மனுத்தாக்​கல் செய்​திருப்​பது ‘ஃப்​ரெண்ட்லி ஃபைட்’ என்ற பெயரில் குழப்​பத்தை ஏற்​படுத்​தியுள்​ளது.எனவே,புதுச்​சேரி​யில் தனித்​துப்போட்டி என்று அறி​வித்​துள்ளோம்.
இருப்​பினும்,மனு​வைத் திரும்​பப்பெற இன்​னும் காலஅவகாசம் இருப்​ப​தால்,பேச்​சு​வார்​த்தை மூலம் சுமுக முடிவு காண வாய்​ப்​புள்​ளது.

இவ்​​வாறு அவர் தெரி​வித்​​தார்.

நேற்று இரவு 7.15 மணி​யள​வில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், பொருளாளர் எல்​.சுதீஷ், விஜய பிர​பாகரன் உள்​ளிட்​டோர் அண்ணா அறி​வால​யத்​தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா​லினை சந்​தித்​தனர்.இந்த
சந்​திப்​பைத் தொடர்ந்து தேமு​தி​க​வுக்கு 10 தொகு​தி​களை ஒதுக்​கீடு செய்​யும் ஒப்​பந்​தத்​தில் மு.க.ஸ்டா​லின், பிரேமலதா விஜய​காந்த் கையெழுத்​திட்​டனர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் பேசிய பிரேமல​தா…

எந்​தெந்த தொகு​தி​களில் தேமு​தி​க​வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்​கிறதோ அந்த தொகு​தி​களின் விருப்பப்பட்​டியலை திமுக​விடம் கொடுத்து இருக்​கி​றோம்.விரை​வில் எங்​களுக்​கான தொகு​தி​களைக் கேட்டுப்பெறு​வோம்.27 ஆம் தேதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​படும்; 1 ஆம் தேதி முதல் வேட்​புமனு தாக்​கல் செய்​வோம்.மொத்​த​மாக 25
தொகு​தி​கள் அந்தப் பட்​டியலில் இருக்​கிறது.நாங்​கள் கடைசி​யாக திமுக கூட்​ட​ணிக்கு வந்​தோம்,அதனால்​தான் தாமத​மாக கூட்​டணி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.நாங்​களும் தொகு​தி​களை விட்​டுக்​கொடுத்து இருக்​கி​றோம்
என்​றார்.

திமுக கூட்​ட​ணி​யில் இது​வரை 66 தொகு​தி​கள் கூட்​டணிக் கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

Leave a Response