புதிய சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற்ற தநா அரசு – மு.வீ வரவேற்பு

தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் சட்​டத்​திருத்த மசோ​தாவை திரும்​பப்​பெறுவதென தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, கட்​சி​யின் தமிழ்நாடு செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கையில்…

அண்​மை​யில் நடந்த சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தில், தனி​யார் பல்​கலைக்​கழகங்கள் சட்​டத்​திருத்த மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதனால் ஏற்​படும் எதிர்​விளைவு​கள், அரசின் சமூகநீ​திக் கொள்​கைக்கு எதி​ராக அமை​யும்
என்​ப​தை​யும்,அடித்​தட்டு உழைக்​கும் மக்​களின் கல்வி பெறும் உரிமையை மறுக்​கும் என்​பதை அரசின் கவனத்​துக்கு எடுத்​துக் கூறப்​பட்​டது.

கல்​வி​யாளர்​கள், மாணவர் அமைப்​பு​கள், அரசி​யல் கட்​சிகள் பல்​கலைக்​கழகங்​கள் சட்​டத் திருந்த மசோ​தாவை திரும்​பப் பெற வேண்​டியதன் அவசி​யத்தை வலி​யுறுத்தி வந்த நிலை​யில், அதன் நியா​யத்தை உணர்ந்​து,தமிழ்நாடு அரசு மசோ​தாவை திரும்​பப் பெற்​று, மறு​பரிசீலனை செய்​வது என முடிவு எடுத்​துள்​ள​து. ​

பேர​வை​யில் நிறைவேற்​றிய மசோதா மீது மக்​கள் மன்​றத்​திலிருந்து வந்த விமர்​சனக் கருத்​துகளுக்கு
மதிப்​பளித்​து,சட்ட மசோ​தாவை திரும்​பப் பெறும் தமிழ்நாடு அரசின் முடிவை இந்​திய கம்​யூனிஸ்ட் வரவேற்​கிறது

இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

Leave a Response