ஹாட் ஸ்பாட் – திரைப்பட விமர்சனம்

ஏண்டா தலைல எண்ணை வைக்கல, திட்டம் இரண்டு, அடியே ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ்கார்த்திக் இயக்கியுள்ள படம் ஹாட்ஸ்பாட்.

அவருக்கு இது நான்காவது படமாம்.படத்திலும் நான்கு கதைகள் இருக்கின்றன.

முதல்கதையில் பெண்கள் உரிமை பற்றிப் பேசியிருக்கிறார்கள்,இரண்டாவது கதை காதல்கதை,அது வழக்கமான கதை இல்லை, மூன்றாவது ஆண் பாலியல் தொழிலாளியான கதை, நான்காவது கதை தற்காலத்தில் குழந்தைகளை எப்படிச் சீரழிக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆதித்யா பாஸ்கர், கெளரிகிஷன், நடன இயக்குநர் சாண்டி, அம்முஅபிராமி, சுபாஷ்,ஜனனி,கலையரசன்,சோபியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோகுல்பினாய், இசையமைப்பாளர்கள் சதீஷ்ரகுநாதன்,வான் ஆகிய தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

இயக்குநர் விக்னேஷ்கார்த்திக்கும் தயாரிப்பாளர் பாலமணிமார்பனும் திரையில் பொருத்தமாகத் தோன்றியிருக்கிறார்கள்.

நான்கு கதைகளில் மூன்றாவது கதை முகம் சுளிக்க வைக்கும்படி அமைந்திருப்பது ஒட்டுமொத்த படத்துக்கும் தகுதிக்குறைவை ஏற்படுத்தியிருக்கிறது.திரைப்பட வியாபார அம்சங்களுக்காகச் செய்துகொண்டிருக்கும் சமரசமும் வைத்திருக்கும் காட்சிகளும் இயக்குநருக்கு நன்மை பயப்பதாக இல்லை.

இரண்டாம் கதை குழப்பமாக இருக்கிறது. முதல்கதையிலும் நான்காம் கதையிலும் இயக்குநர் சொல்லியிருக்கும் கருத்துகள் நன்று.

– சுரேஷ்

Leave a Response