யார் யாருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்காது? – கசிந்த தகவல்

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, யார் யாருக்கெல்லாம் இந்த உரிமைத் தொகை கிடைக்கும், என்னென்ன தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அரசு தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தத் தொகை யாருக்கு கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்காது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அதன் விவரம்…..

> குடும்ப அட்டை எந்தக் கடையில் உள்ளதோ, அந்தக் கடையில் விண்ணப்பிக்க வேண்டும்.
> பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது
> பெண் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களான குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.
> ஆண்டுக்கு 2.5 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது.
> சொந்தமாக மகிழுந்து வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.
> ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.
> 3,500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப் படாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்த முதலில் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதற்கான பணியில் “இல்லம் தேடிக் கல்வித் திட்ட” தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கென பிரத்யேக செயலி வழங்கப்படும். இந்தச் செயலில் பயனாளிகள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய, நியாயவிலைக் கடையில் உள்ளது போன்று பயோ மெட்ரிக் கருவியும் வழங்கப்படும். இந்தக் கருவியின் மூலமாக, குடும்ப அட்டைதாரர் குறித்த உண்மை நிலை அறிந்து கொள்ளப்படும்.

இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response