பிரபாகரன் இருக்கிறாரா? – அன்புமணி கருத்து

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது……

சேலம் மாவட்ட மக்களின் நீண்ட கால பிரச்னையான காவிரி உபரி நீர்தித்ட்டம், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேலம் பனமரத்துப்பட்டி ஏரியைத் தூய்மைப்படுத்தி, அதில் ஒரு டிஎம்சி தண்ணீர் தேக்கி வைத்து, சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணியை முழுமைப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் விமானங்கள் வந்திறங்கும் வகையில் ஓடுதளம் அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்த மாவட்டமும் வளர்ச்சி அடையும். நூல் விலை உயர்வால் விசைத்தறிகளை இயக்காமல் உள்ளனர். இதில், மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

காவல் துறையில் பணியாற்றிய தமிழக ஆளுநர், ஆன்லைன் சூதாட்டம் தடை தொடர்பான அவசர சட்டத்தில் கையெழுத்திட மறுக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் 14 பேர் தற்கொலை செய்துள்ளனர். வாரத்துக்கு 2 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு தமிழக ஆளுநரே காரணம். அவர் கையெழுத்து போட மறுத்தால், பாமக போராட்டம் நடத்தும்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக்க் கூறுவதில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை உள்ளது எனத்தெரியவில்லை.

கலைஞருக்கு நினைவுச்சின்னம் வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதனை அவர் நினைவிடம் இருக்கும் இடத்திலேயே அமைக்கலாம்.

இவ்வாறு கூறினார்.

Leave a Response