தமிழில் கையெழுத்து தமிழில் முன்னெழுத்து – அரசாணை முழுவிவரம்

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தைத் தமிழில் இடவேண்டும் என தமிழக அரசு ஆணையை சுட்டிக்காட்டி பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்துப் பதிவுகளிலும் பெயர்களைத் தமிழில் பராமரிக்கவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதுதொடர்பான அரசாணை விவரம்….

பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டுவரவும் மாணவர்கள் பள்ளிக்குச்சேர அளிக்கும் விண்ணப்பம் வருகைப் பதிவேடு பள்ளி கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினைக் கொண்டு வரவும் மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெழுத்தும் தமிழில் கையொப்பமும் தமிழில் என சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்திடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஎம் ஐ எஸ் வழியாகப் பராமரிக்கப்படும் 30 மின்பதிவேடுகளில் மாணவர் மற்றும் பெற்றோர்கள் பாதுகாவலர் பெயர்களைத் தமிழில் பெயர் பதிவேற்றம் செய்யும்பொழுது அதன் முன்னெழுத்தையும் தமிழில் பதிவேற்றம் செய்தல் வேண்டும் என அனைத்துநிலை தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response