எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்டுத்தொகை உறுதியானது – தேர்தல் கணக்கு

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 27) இந்த அறிவிப்பு வெளீயானது.

இதன்மூலம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினர் ஆவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

எப்படி?

2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க 4 தொகுதிகளில் மட்டும் இரண்டாவது இடம் பிடித்தது. அதில் எடப்பாடி தொகுதியும் ஒன்று. அங்கே வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி வாங்கிய ஓட்டுகள் 98,703. இரண்டாவது இடம் பிடித்த பா.ம.க-விற்குக் கிடைத்த ஓட்டுக்கள் 56,681.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் பாராளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியிருக்கும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள் 96,485. தி.மு.க. கூட்டணி பெற்ற ஓட்டுகள் 1,04,573. அ.தி.மு.க. கூட்டணியைவிட, தி.மு.க. கூட்டணி 8,088 வாக்குகள் அதிகம் வாங்கியது.

இந்த நிலையில் பாமக, அதிமுக கூட்டணிக்குள் வந்திருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவும் இருந்த நிலையில்தான் திமுக அதிக ஓட்டுகள் பெற்றது. இப்போது பாமகவைச் சேர்க்காமல் இருந்திருந்தால் கட்டுத்தொகை கூடக் கிடைக்காத அளவு குறைந்த வாக்குகள்தாம் கிடைத்திருக்கும். பாமகவைச் சேர்ந்திருப்பதால் கட்டுத்தொகை கிடைப்பது மட்டும் உறுதியாகியிருப்பதாக எதிரணியினர் சொல்கிறார்கள்.

Leave a Response