தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் அட்டவணை – முழு விவரம்

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.

அதன் விவரம்….

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மார்ச் 27 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல். ஏப்ரல் 1 ஆம் தேதி 2 ஆம் கட்டத் தேர்தல். 6 ஆம் தேதி 3 ஆம் கட்டத் தேர்தல்.

முதல் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 27 ஆம் தேதி.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 1 ஆம் தேதி.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 6 ஆம் தேதி.

வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27 ஆம் தேதியும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 3 ஆவது கட்டம் ஏப்ரல் 6 ஆம் தேதியும், 4 ஆவது கட்டம் ஏப்ரல் 10 ஆம் தேதியும், 5 ஆவது கட்டம் ஏப்ரல் 17 ஆம் தேதியும் நடைபெறும். 6 ஆவது கட்டத் தேர்தல் ஏப்ரல் 22 ஆம் தேதியும், 7 ஆம் கட்டத் தேர்தல் தேதி ஏப்ரல் 26 ஆம் தேதியும், 8 ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும்.

வேட்புமனு தாக்கல்: 12-03-21
வேட்புமனு தாக்கல் நிறைவு : 19-03-21
வேட்புமனு பரிசீலனை: 20-03-21
வேட்புமனுவை திருமப பெற கடைசி நாள் : 22-03-21
தேர்தல் நாள் : 06-04-21
வாக்கு எண்ணிக்கை : 02-05-21

கேரளத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.

தேர்தல் தேதி: ஏப்ரல்-6 ஆம் தேதி
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12 ஆம் தேதி
வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19 ஆம் தேதி
வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20 ஆம் தேதி
வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22 ஆம் தேதி
வாக்கு எண்ணிக்கை: மே-2 ஆம் தேதி

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல்:

தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி
வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி
வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி
வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி
வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி

5 மாநில தேர்தலுக்கான முடிவுகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை முடிவு ஆகிய அனைத்தும் மே 2 ஆம் தேதி வெளியிடப்படும்.

Leave a Response