திமுக போராட்டத்தின் பலன் 2 நாட்கள் மட்டுமே – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்தும் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த பத்து நாட்களாக தினமும் விலை உயர்ந்து கொண்டிருந்தது. தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலைக்கெதிராக திமுக போராட்டம் அறிவித்தது. அதனால் பிப்ரவரி 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் விலை உயராமல் பிப்ரவரி 20 ஆம் தேதி விலையே தொடர்ந்தது.

பிப்ரவரி 20 ஆம் தேதி முந்திய நாளைவிட பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 92.59 ரூபாய் எனவும், டீசல் விலையில் 35 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 85..98 ரூபாய் எனவும் இருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் விலை உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.92.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் சிலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.86.31-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Leave a Response