அமைச்சர் பெயர் சொல்லி இலஞ்சம் கேட்கும் அதிரவைக்கும் ஆடியோ – முழுவிவரம்

தமிழக அரசின் பல்வேறு துறைப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது. இதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட துறை சார்பிலும் நேரடி நியமனம் என்கிற பெயரில் பணி நியமனம் செய்யப்படும். இந்த நேரடி பணி நியமனத்துக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் நிலை உள்ளது. இதற்காக, ஏஜென்ட்கள் மூலமாகவும், அமைச்சர்களின் உதவியாளர்கள் எனக் கூறிக்கொண்டு பல்வேறு நபர்கள் தேர்வு எழுதியவர்களின் செல்போன் நம்பரை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி, நியமன ஆணைகளைப் பெற வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் தர வேண்டும் என்று பேரம் பேசி வசூல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் உதவியாளர், உதவிப் பொறியாளர் பணி நியமனத்துக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் பெயரைப் பயன்படுத்தி, அவரது உதவியாளர்கள் எனக்கூறிக்கொண்டு தேர்வு எழுதியோர்களிடம் பேரம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோக்களில் உள்ளதாவது….

அமைச்சரின் உதவியாளர்: மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் உதவியாளர் தேர்வு எழுதியிருக்கிறீர்கள். உங்களிடம் அப்பாயின்ட்மென்ட் விஷயமாக பேச வேண்டியிருக்கிறது. 1 வாரத்தில் ஆர்டர் கொடுத்து விடுகிறோம். உங்களுக்கு ஒரு ரேட் நிர்ணயித்து வைத்திருக்கிறோம்.
அப்போது மறுமுனையில் பேசிய பெண் ஒருவர் : உங்களது பெயர்
உதவியாளர்: மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகம் ஈரோட்டில் இருந்து பேசுகிறோம் மா.
பெண்: சரிங்க சார்
உதவியாளர்: ரூ.6 லட்சம் பைனல் பண்ணி வைத்திருக்கிறோம். நீங்கள் சரி என்று சொன்னால், எங்க வரணும் என்று சொல்வோம், அங்க வைத்து கொடுக்க சொல்வோம். அமைச்சர்கிட்டயே உங்களை கொடுக்க வைப்போம்
பெண்: என் நம்பரை எப்படி கலெக்ட் பண்ணீங்க. முன்னாடி மெரீட்ல தான சார் பண்ணுவாங்க
உதவியாளர்: மெரீட்ல 2 பேர் வந்துட்டாங்க. அதில் யாராவது ஒருத்தருக்கு தான் தர முடியும்.
பெண்: புரியலைங்க சார். யார் ரெண்டு பேரு.
உதவியாளர்: இன்னொருத்தர் இருக்கிறாங்க மா. அதனால ஒருத்தருக்கு தான் தர முடியும்.
பெண்: இல்லைங்க சார் எனக்கு ஒரு மாதிரி இருக்கு.
உதவியாளர்: சரிங்கமா.. நீங்க யோசனை பண்ணி சொல்லுங்க
பெண் : ஆமா சார். இதில ரொம்ப காம்படிஷன் இருக்குண்ணு சொல்றீங்களா..
உதவியாளர்: காம்படிஷன் இருக்க போய் தான் உங்களை கூப்பிடுது. வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க பண்ணிக்கலாம். இல்லை எப்படி ஆண்டவன் விடுறானோ அதான்..
பெண்: எனக்கும், யாருக்கும் காம்படிஷன் இருக்கு சார்.
உதவியாளர்: அதை யாருன்னு சொல்லக்கூடாதுல மா.
பெண்: ரிட்டர்ன் எக்ஸாம்ல நான் நல்லாதான் மார்க் வாங்கியிருக்கிறேன்.
உதவியாளர்: எல்லாம் முடிஞ்சது. நாங்க உங்களுக்கு ஓன் வீக்ல ஆர்டர் கொடுக்க ரெடி. அதான் சொல்றோம்.
பெண்: அதனால தான் கால் பண்ணீங்களா.
உதவியாளர்: ஆமாம்மா அதான் உங்ககிட்ட கேட்கிறேன்.
பெண்: வீட்டில டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன் சார்.
உதவியாளர்: ஓகே மா சொல்லுங்க.
மற்றொரு பெண்ணிடம் அமைச்சரின் உதவியாளர் எனக்கூறி பேசிய போது: மாசு கட்டுப்பாடு வாரியத்தில் நேற்று போன் பண்ணி சொன்னோம்ல மா
பெண்: சொல்லுங்க சார்:
உதவியாளர்: அமைச்சரை பார்க்க வர சொன்னேன்ல மா. இங்க வர வாய்ப்பு இருக்கா. இல்ல சென்னை வர்றீங்களான்னு கேட்க தான் கூப்பிடுறேன்.
பெண்: இப்போது அமைச்சர் எங்கே சார் அவைலபிள்.
உதவியாளர்: நாளை சாயந்திரம் வரை ஈரோடு மாவட்டம் கவுண்டம்பாடியில இருக்காரு மா.
பெண்: சரிங்க சார்.
உதவியாளர்: நாளைக்கு நைட் புறப்பட்டு சென்னை வந்துடுறேயாமா, சென்னையில சிஎம் வீடு இருக்குல கிரீன்வேஸ் சாலையில. அந்த சந்துல கடைசில வந்து அமைச்சர் கருப்பணன் வீடு எங்கன்னு கேட்டா சொல்லுவாங்க மா.
பெண்: ஓகே சார்
உதவியாளர்: உங்களுக்கு எப்படி அவைலபலோ அப்படி பாத்துக்குங்க. உங்களுக்கு ஒன் வீக்ல ஆர்டர் கொடுத்துருவாங்க. கொடுத்த அப்புறம் உங்களுக்கு எந்த ப்ளேஸ்ன்னு வாங்கிக்கலாம். கடைசில சிக்கல் ஆகிடும். அதுக்கோசரம் சொல்றேன். உங்களுக்கு என்ன ப்ளேஸ் வேணுமோ அங்க வாங்கி கொடுத்துடுறோம்.
பெண்: இல்லை சார். மெரிட் லிஸ்ட் அப்பவே சொல்லிருந்தாங்களே சார். இப்ப அமவுன்ட் கேட்டா என்ன பண்றது சார்.
உதவியாளர்: இப்போ நீங்க திண்டுக்கல்லில் இருக்கிறீங்க. உங்களை ஊட்டி கொண்டு போட்டா என்ன செய்வீங்க. தமிழ்நாட்டுல எங்க வேணும்னாலும் போடலாம் மா. உங்களுக்கு பக்கமா எது வேணுமா, அதுக்கு தான் கூப்பிடுறோம்.
பெண்: பேமிலி பேக்ரவுண்ட்னு ஒன்னு இருக்குல்ல சார்.
உதவியாளர்: உங்களுக்கு எவ்ளோ முடியும்னு சொல்லுங்க
பெண்: முடியுங்கிறதுக்காக சொல்லல சார். இப்போ தான் பேபி வேற பிறந்திருக்கு. எங்க பேமிலி வெல்பேர் பேமிலியும் கிடையாது சார். என்னுடைய ரிட்டர்ன் மார்க், இன்டர்வியூ மார்க் உங்களுக்கு தெரியுமா சார்.
உதவியாளர்: வெள்ளிக்கிழமை உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கையில கொடுக்கிறோம். அதை கையில வாங்கிட்டு உங்களுக்கு எந்த ப்ளேஸ் வேணும்னு சொன்னீங்கன்னா. அந்த இடத்த போட்டு கொடுத்துருவோம். அதுக்காக தான் சொல்றோம்.
பெண்: புல் மெரீட் தான சார். திடீருன்னு அமவுண்ட் கேட்டா.
உதவியாளர்: நீங்க தான சொல்லிக்கிறீங்க. அப்படின்னு யார் சொன்னது.
பெண்: இது ஓப்பனாவே அமவுன்டுனா அங்கேயே சொல்லிருப்பாங்களே. நோட்டிப்பிகேஷனுலேயே நாங்க பார்த்திருப்போம்ல சார்.
உதவியாளர்: அப்படிலாம் யாரும் ஓபனா சொல்ல மாட்டாங்கமா. உங்க பக்கத்துல எம்எல்ஏ, அமைச்சரு யாரு இருந்தா கேட்டு பாருங்க. அவங்களே எங்கட்ட பேசுவாங்க
பெண்: அமவுன்ட் இல்லைனா போஸ்ட்டிங் இல்லைன்னு சொல்றீங்களா
உதவியாளர்: வாய்ப்பு இருக்கு. ஆனா வெளிய போட்டுருவாங்க. லோக்கல தரமாட்டாங்க.
பெண்: லோக்கல்ல இல்லைன்னு சொல்றீங்களா
உதவியாளர்: தமிழ்நாட்டுல எங்க வேணும்னாலும் போடலாம். பக்கத்துல போடுறதுக்கு ரெக்கமென்டேஷன் மாதிரி. எங்க வேணும்னா போறது உங்க விருப்பம்.
பெண்: முதல்ல ஜாப் இருந்தா தானா. எந்த ஒரு அஸ்சூரன்சும் இல்லை.
உதவியாளர்: உங்க விருப்பம் என்னவோ அத பண்ணிக்கோங்க.
பெண்: புரியலைங்க சார்
உதவியாளர்: உங்களுக்கு நல்லத நான் சொல்றேன்.
பெண்: இல்லை சார். நான் மெரிட் கேன்டிடேட். நான் டாப்ல இருக்கேன்னு எனக்கு பர்ஸ்ட்டே தெரியும். நான் செலக்ட் ஆகலன்னா ஒரு இஸ்யூ வரும்ல.
உதவியாளர்: ஒண்ணுமே ஆகாதுமா.
பெண்: எனக்கு புரியல சார்..
உதவியாளர்: நான் நேர்ல பேசுறேன். ஆர்டர் கொடுக்கிற அன்னைக்கி வாங்க அப்போ பேசிக்கலாம்.
பெண்: சார் உங்க நேம்
அந்த நபர் போனை துண்டித்து விட்டார்.
அமைச்சரின் பிஏ எனக்கூறி அதே நபர் மற்றொரு பெண்ணிடம் பேசியதாவது: மேடம். நீங்க ஈரோடு வர்றீங்களா இல்லை. சென்னை வர்றீங்களா.
பெண்: இல்லை சார். இப்ப உடனே அமவுன்ட் ரெடி பண்ண முடியாது சார் பேமிலி பேக்ரவுண்ட் புவர் சார். இப்ப உடனே தர முடியாது.
உதவியாளர்: இல்லமா பாதி அமவுன்ட் ஆர்டர் போடும் போது குடுக்கங்க. அப்புறம் ஜாயின்ட் பண்ணிட்டு கொடுங்க
பெண்: நீங்க சொல்றத யோசித்து பார்த்தா எல்லாம் சரிதான். என்ன சொல்றது. அப்பாவுக்கு இப்ப உடம்பு சரியில்லமா போயிட்டு. அப்பா கொத்தனார் கையாளா தான் வேலை செய்றாரு. அவருக்கு உடம்பு சரியில்லாம இருந்ததால கொஞ்சம் செலவு பண்ணிட்டோம்.
உதவியாளர்: அப்போ நீங்க எதிர்பார்க்குறது வேண்டாம் அப்படி தான..
பெண்: ஆர்டர் வாங்கிட்டு அதுக்குப்புறோம் பணம் கேட்டா தான் தருவாங்க. ஆர்டர் வாங்குற முன்னாடி யார்ட்டயும் போய் கேக்குறது கஷ்டம்ல சார்.
உதவியாளர்: ஆர்டர் வாங்குனா தந்துருவீங்களா?
பெண்: கண்டிப்பா சார்.
உதவியாளர்: என் பேர் ஜான், நான் தொழிற்சங்க மாவட்ட செயலாளராக இருக்கேன். மாசுகட்டுப்பாடு வாரிய அமைச்சர் எங்க பக்கத்து வீடு தான். கவுண்டம்பாடியில பக்கத்து வீடு தான். அப்படியே அமைச்சர் வீட்டு பின்னாடியே என் வீடு இருக்கு.
பெண்: நேத்தே என்கிட்ட சொன்னீங்க
உதவியாளர்: நான் நம்ம பொண்ணு தாண்ணே-னு அமைச்சர்ட்ட சொல்லிடுறேன். ஜாயின்ட் பண்ணிட்டு ஒன் வீக்ல பணம் தருவாங்க நான் ஜாமீன் தர்றேன். அதுல உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல. என்னோட பர்சனல் நம்பரை எழுதிக்கிடுறீங்களா.
பெண்: சொல்லுங்க சார்.
உதவியாளர்: 9443948646 இது தான் என் நம்பர். கேஆர்.ஜான் தான் என்பேரு.
பெண்: அமவுன்ட் கம்மி பண்ண முடியுமா.. எங்க வீட்டை பொறுத்தவர ரொம்ப அதிகம்
உதவியாளர்: இல்லமா திங்கட்கிழமை நான் சென்னைக்கு அமைச்சரோட போய்டுவேன். முதல்வரு வீடு பக்கத்துல கருப்பணன் வீடுன்னா வந்துடலாம்.
பெண்: உள்ளே அலோவ் பண்ணுவாங்களா
உதவியாளர்: நான் அமைச்சரை பார்த்து உங்களுக்கு பண்ணி கொடுக்கிறேம்மா. ஒரு டோக்கன் மாறி அமைச்சர்ட்ட கொடுத்துட்டு நான் ஜாயின்ட் பண்ணி கொடுத்திருவேன்னு சொல்லிட்டு வாங்க. வேலை கிடைக்கிறது கஷ்டம்மா. நீங்க நினைக்கிற மாதிரி இல்லம்மா. இவ்வளவு தூரம் அட்வைஸ் பன்றேன்னா உங்களுக்காக தான சொல்றேன். நீங்கள் திங்கள் வர்றீங்களா. செவ்வாய் வர்றீங்களா.
பெண்: உங்களுக்கு எந்த ஏரியா சார்
உதவியாளர்: நான் அமைச்சர் வீடு பின்னாடிதாம் மா. நீங்க நேர்ல வாங்க. அங்க வந்து பேசுங்க. உங்களுக்கு எந்த ப்ளேஸ் வேணும்னு வந்து பேசுனும்ல. உங்கள ஊட்டி போட்டா என்ன பண்ணுவீங்க. உங்க நல்லதுக்காக தான் சொல்றேன்.
பெண்: ஓகே சார்
நான்காவதாக ஆண் ஒருவரிடம் அமைச்சர் பிஏ எனக்கூறி பேசியதாவது: அசோக்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
அசோக் : ஆமா சார்
உதவியாளர்: நான் ஈரோடுல இருந்து பேசுறேன். நீங்க ஏஇ தேர்வு எழுதிருக்கீங்க. உங்க அப்பாயின்ட்மென்ட் விஷயமா ரேட் பிக்ஸ் பண்ணிருக்கோம். நீங்க நேரடியாக அமைச்சர் வீட்ல தரணும்.
அசோக்: சார் நாங்க அவ்வளோ பெரிய பேமிலி இல்ல. எவ்ளோ சார் தரணும்
உதவியாளர்: 15 லட்சம் தரணும். நீங்க 10 லட்சம் கொடுத்தா ஆர்டர் கொடுத்துருவாங்க.
அசோக்: எங்க சொத்தை சேர்த்தா கூட அவ்வளவு வராது. நாங்க வாடகை வீடு தான். அப்பா நெசவு தொழில் தான்.
உதவியாளர்: உங்களுக்கு நல்ல வாய்ப்பு பார்த்துக்கோங்க
அசோக்: இல்ல சார். தேங்க்யூ சார்.

இவ்வாறு ஆடியோ உரையாடல் உள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 21) ஈரோடு மாவட்டம், பெருந்துறை – விஜயமங்கலம் நான்குவழி நெடுஞ்சாலை, கடப்பமடை கலைஞர் திடலில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறார், கே.சி.கருப்பண்ணன். அவருடைய துறையில் நியமனம் செய்ய வெளிப்படையாக இலஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது என்று சொல்லி ஒலிபரப்பப்பட்டது.

Leave a Response