தில்லி போராட்டத்துக்கு ஆதரவு – தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக்குழு போராட்ட விவரங்கள்

மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராடும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (12.12.2020) காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழகமெங்கும் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகங்களின் முன் மறியல் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

அவை குறித்த விவரங்கள்….

பெருங்குழும வேட்டைக்கான மூன்று சட்டங்களை வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் மோடி அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டங்கள் அவசரச் சட்டங்களாக 2020 சூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட காலத்திலேயே அவற்றை எதிர்த்து ஊர் ஊராகத் துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்தது காவிரி உரிமை மீட்புக்குழு! அத்துடன் அந்த மூன்று அவசரச் சட்ட நகல்களையும் எரித்துப் போராடினோம்!

இப்போது தில்லியில் கடும் குளிரில் வடநாட்டு உழவர்கள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாகவும் – மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் – இன்று (12.12.2020) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகங்களின் முன் மறியல் போராட்டத்தை முன்னெடுத்தது காவிரி உரிமை மீட்புக் குழு!

தஞ்சை

தஞ்சையில் பாலாஜி நகரிலுள்ள இந்திய அரசின் உற்பத்தி வரி அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வரி வசூல் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.

இதனையடுத்து, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் ப.செகதீசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் சிமியோன் சேவியர்ராசு, இந்திய யூனியன் முசுலீம் லீக் மாவட்டத் தலைவர் சைனுலாப்தீன், மனிதநேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் அகமது கபீர், காவிரி உரிமை மீட்புக் குழு துரை.இரமேசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலாளர் கே.வெற்றி, தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழக மாவட்டச் செயலாளர் சி.குணசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். த.தே.பே. தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை முழக்கங்கள் எழுப்பினார்.

மன்னார்குடி

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடியில் இந்தியத் தலைமை அஞ்சலகம் முன்பு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளரும், காவிரி உரிமை மீட்புக் குழு செயல்பாட்டாளருமான மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன் தலைமையில் மறியல் போராட்டத்தில் சற்றொப்ப 250 உழவர்கள் பங்கேற்றனர். தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் ச.கலைச்செல்வம், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தை.செயபால், தமிழக விவசாயிகள் சங்கம் மோகன்தாசு, உழவர் மன்றம் வரதராசன், தென்னக நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் பழனிவேலு, நீடாமங்கலம் விவசாயிகள் சங்கம் இராமலிங்கம், மற்றும் காவிரி உரிமை மீட்புக்குழுவின் உழவர் பெருமக்கள் – “அகரம்” அமைப்பின் சூனா செந்தில், அரிகரன், தேவா, மகேந்திரன், கணேசன், நிரஞ்சன், சுதாகர், மணி, பிரேமாவதி, பூபாலன், கண்ணன், கோவலன், அறிவழகன், ஞானப்பிரகாசம், வீரையன், சுரேசு, வீரசேகரன், சாம்பசிவம் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

குடந்தை

தஞ்சை மாவட்டம் – குடந்தையில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கான போராட்டம் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் தீயணைப்புத்துறை வாசலில் குழுமிய காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகளை வைத்து தயாராக இருந்தனர். போராட்டக்காரர்கள் காவல்துறையினர் வைத்த தடுப்புகளைத் தள்ளி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு சாலையை மறித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச்சுடர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் ம.செல்வம், மனிதநேய சனநாயக கட்சி மாநிலச் செயலாளர் எம்பயர் இராசுதீன், மக்கள் அரசு கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ. இராஜ்குமார், தமிழ்த்தேசியப் பாதுகாப்பு கழக இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் கரிகாலன், இந்திய தவ்கீத் சமாத் குடந்தை இப்ராகிம், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் அப்துல் இரகுமான், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தீந்தமிழன், வனவேங்கைகள் மாவட்டச் செயலாளர் போராளி பிரபு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் தளபதி சுரேசு, இளந்தமிழ்ப்புலிகள் பாசறை மாநில துணைச்செயலாளர் பி.விஜய்ஆனந்த், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் தை.சேகர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டத் துணைச்செயலாளர் வா.செ.பிரபு, மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் முருகன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் எண்கண்.பாரதி, அரியலூர் மாவட்டச் செயலாளர் சரண்ராஜ், உழவர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் கோவி. கணேசன், மாவட்ட செய்தித்தொடர்பாளர் சாக்கோட்டை இராசா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி அரியலூர் மாவட்டத் தலைவர் திருமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பூதலூர்

தஞ்சை மாவட்டம் – பூதலூரில் நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் சோழன் விரைவு வண்டி மறிக்கப்பட்டது. தமிழக விவசாயச் சங்க பூதலூர் ஒன்றியப் பொறுப்பாளர் பா.தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இம்மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உழவர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். சீ.தனபாலன் முன்னிலை வகித்தார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு பி.தென்னவன், மாரனேரி நடராசன், கலைக்கோவன், புதுப்பட்டி செல்வம், நாம் தமிழர் கட்சி பகுதிச்செயல்பாட்டாளர் அற்புதராஜ், திமுக பவுன்ராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட உழவர்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து, பூதலூர் இரம்யா திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

ஆடுதுறை

ஆடுதுறையில் தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு.கார்த்திகேயன் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழக கொள்கைப்பரப்புச் செயலாளர் புலவர் இரா.சிவராசு முன்னிலை வகித்தார். த.தே.பா.க. தஞ்சை மாவட்ட துணைச்செயலாளர் அரங்க. பாரி, திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் வழக்கறிஞர் காசி.சிறீதர், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் தளபதி இராகுல், மையச்செயற்குழு உறுப்பினர் தமோதரன், திருப்பனந்தாள் ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் கோதை. இராவணன், திருவிடைமருதூர் ஒன்றியச் செயலாளர் பாஸ்.விஜி மற்றும் பிரபுதேவா, கவியரசு, சிறீதர், கார்த்தி, பாபு, வெற்றி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி

திருச்சியில் தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம், காவிரி உரிமை மீட்புக் குழு திருச்சி ஒருங்கிணைப்பாளர் மூ.த.கவித்துவன் தலைமையில் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.பா.சின்னத்துரை, தமிழக முற்போக்கு பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தலைவர் வழக்கறிஞர் த.பானுமதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் வே.க.இலக்குவன், மனிதநேய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் பேராசிரியர் மொய்தீன், தமிழ்ப் பேரரசுக் கட்சி மாவட்டச் செயலாளர் உசைன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் இனியன், பாவலர் இராசாரகுநாதன், வெள்ளம்மாள், விராலிமலை செயலாளர் வே.பூ.இராமராசு, திருவெறும்பூர் நகரக்கிளை செயல்பாட்டாளர் பாஸ்கரன், கொத்தமங்கலம் கிளைச் செயலாளர் அன்பரசன் உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் இந்தியத் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம், காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் இரா.வேல்சாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, உலகத் தமிழ்க் கழகம் புதுச்சேரி அமைப்பாளர் கோ.தமிழுலகன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்புச்செயலாளர் ந.மலையாளத்தான், தமிழர் களம் புதுச்சேரி அமைப்பாளர் கோ.அழகர், ஏ.ஐ.யு.டி.யு.சி. தலைவர் செ.பு. சங்கரன், புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்க செயலாளர் த.இரமேசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரி அமைப்பாளர் சிறிதர்,புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் புதுவைத் தமிழ்நெஞ்சன், தொரவி த.தே.பே. கிளைச் செயலாளர் முருகன், புதுச்சேரி மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் உதயசங்கர், யாவரும் கேளிர் அறக்கட்டளை நிர்வாகி கேசவன், தமிழின உணர்வாளர் செஞ்சி சாய்ரா, சாபிக் பாட்சா மற்றும் த.தே.பே. உறுப்பினர்கள் தே. சத்தியமூர்த்தி, சிவக்குமார், பெருமாள், விசயகணபதி, மணிகண்டன், கௌசல்யா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

பெண்ணாடம்

கடலூர் மாவட்டம் – பெண்ணாடத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.முருகன் தலைமையில் நடைபெற்றது. த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா.மணிமாறன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் சி.பிரகாசு, தி.வேல்முருகன், மகளிர் ஆயம் வே.தமிழ்மொழி, வழக்கறிஞர் மு.செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் க.கண்ணதாசன், மாந்த நேயப் பேரவை பஞ்சநாதன், மக்கள் அதிகாரம் அசோக்குமார் ஆகியோர் உரையாற்றினர். த.தே.பே. சிதம்பரம் நகரச் செயலாளர் எல்லாளன், பேரியக்க உறுப்பினர்கள் வேந்தன் சுரேசு, தே.இளநிலா, மு.பொன்மணிகண்டன், சி.பிரபாகரன், தி.சின்னமணி, மகளிர் ஆயம் பொருளாளர் ம.கனிமொழி, பி.சாந்தலெட்சுமி, மு.தமிழ்மணி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இராயக்கோட்டை

கிருட்டிணகிரி மாவட்டம் – இராயக்கோட்டையில் பேருந்து நிலையம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில், பொதுச் செயலாளர் தூ.தூருவாசன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், தமிழக உழவர் முன்னணி தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசு மறியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். த.தே.பே. முருகப்பெருமாள், வனமூர்த்தி ஆகியோர் முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் பசிகம் பெரியசாமி, தோரனப்பட்டம் குப்புராஜ், நாம் தமிழர் கட்சி சக்திவேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரமேசு, தமிழ்த்தேசியப் பேரியக்க ஓசூர் செயலாளர் சுப்பிரமணியன், கெலமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர் விருமாண்டி, சஜ்ஜலப்பட்டி குமரவேல், முகளூர் செல்வம், கடமல்பட்டி முருகேசன், கருவாட்டனூனர் மாதேசன், சொன்னியம்பட்டி காளியப்பன், கருக்கம்பட்டி லட்சுமணன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக போராட்டத்தை விளக்கிப் பேசிய தமிழக உழவர் முன்னணி மாவட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டியில் இந்தியத் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியச் செயலாளர் ப.பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது. த.தே.பே.இரா. கோவிந்தசாமி, தலைமைச் செயற்குழு தை.ஜெயபால்,து.இரமேசு, இரா.சரவணன், வழக்கறிஞர் இ.தனஞ்செயன், இரா.தனபாலன், புலவர் வல்வில்ஓரி, நாகை தமிழ்ச்செல்வன், பால்வண்ணன், சித்திரைச்செல்வன், வரதராசன், நா ஞானசேகரன், க. பழனிசாமி, கே.ராஜப்பா, தை.செந்தில்குமார், கோட்டூர் இராசேந்திரன், பால்வண்ணன், சித்திரைச்செல்வன், சா. கோவிந்தசாமி, கா. அரசு, க.பாலு, கா.செல்வம், மதியழகன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர் ப.சிவவடிவேலு நன்றி கூறினார்.

மதுரை

மதுரையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் இரெ.இராசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், இசுலாமிய சேவை சங்கம் ஏ.கே.சாகுல் அமீது, தமிழ்ப் புலிகள் தலைமை நிலையச் செயலாளர் சிறுத்தைச் செல்வன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் அருணா, புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன், தமிழர் முன்னேற்றக் கழகம் மா.து.இராஜ்குமார், தமிழர் தேசிய முன்னணி இராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். த.தே.பே. கிளைச் செயலாளர்கள் விடியல் சிவா, கதிர்நிலவன்,மு.கருப்பையா,தியாகலிங்கம், அறிவழகன், புருசோத்தமன், தி.கருப்பையா, மேலூர் சரவணன், முத்து, ஐயனார், அருளர், சந்திரா, சைமன் அன்னராசா, தமிழ்மணி, மகளிர் ஆயம் துணைத் தலைவர் பே.மேரி, மதுரை அமைப்பாளர் இளமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் குரும்பூரில் கடை வீதியில் மாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் மு.தமிழ்மணி தலைமை தாங்கி உரையாற்றினார். த.தே.பே.விஜயநாராயணப் பெருமாள், நாம் தமிழர் கட்சி ஞானசேகரன், ஆனந்தவேலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான பெண்களும், பொது மக்களும் பங்கேற்றனர்.

Leave a Response