அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவையும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்திருப்பதோடு, தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசும் திமுகவும் இரகசியமாக இணைந்து செயல்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
அவருடைய அறிக்கையில்…
அதிர்ஷ்டத்தால் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு நாளைக்கு அடையாளமில்லாமல் போகப் போகிறவர்கள் வேண்டுமானால் இவர்களின் எகத்தாளத்தையும் இழிசொற்களையும் கண்டும் காணாமல் இருக்கலாம்.அம்மாவை அசிங்கப்படுத்தும் இந்தத் தீயசக்திகளோடு 60:40 ஒப்பந்தம் போட்டு செயல்படுபவர்கள், நீ அடிப்பது போல் அடி, நான் அழுவது போல் அழுகிறேன் என்று பேசி வைத்துக் கொண்டே இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
என்று சொல்லியிருக்கிறார்.
இதன்மூலம் தற்போதைய அதிமுக ஆட்சியின் ஊழல்களில் திமுகவுக்கு 40 விழுக்காடு பங்கு கொடுக்கப்படுகிறது என்று டிடிவி.தினகரன் சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.