நளினி தற்கொலை முயற்சி – பழ.நெடுமாறன் கோரிக்கை

ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏழு பேரில் நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த பழ.நெடுமாறன் வற்புறுத்தியுள்ளார்.

அந்நிகழ்வு தொடர்பாக, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்……

29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி மனம் நொந்து போயிருக்கும் நளினிக்கும், சக சிறைவாசிக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் விளைவாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதற்குக் காரணமானவர்கள் யார்? என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படவேண்டும் என வற்புறுத்துகிறேன்.

உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நளினியை சந்திக்கவும், ஆறுதல் கூறவும் அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினரை அனுமதிக்குமாறு அரசை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response