சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இயக்குநர் சேரன் யோசனை

கொரோனா கிருமி காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த மாவட்டங்களில் நாளுக்குநாள் தொற்று அதிகமாகி வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதையொட்டி இயக்குநர் சேரன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்ரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எழுதியுள்ள திறந்தமடலில்….

அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பயமும் கொரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கி கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம்.

எனவே சென்னையில் கொரொனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி சென்னையில் வாழும் நோய்த்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும்.

அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களைக் கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.

மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்களை உயிரோடு வைத்துக்கொள்ள அவர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல நினைக்கிறார்கள்.அது நியாயமும் கூட. அதற்காக முறையே யோசித்து செயலாற்றவேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response