வைகோ அமைப்பது மக்கள்நலக் கூட்டணி அல்ல,அம்மாநலக்கூட்டணி – சுபவீ கருத்து

வைகோ தலைமையில் உருவாகியுள்ள மக்கள் நலக் கூட்டணி குறித்த உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு சுபவீ சொன்ன பதில்…

அது இன்னும் தேர்தல் கூட்டணியாக உருப்பெற்றுவிடவில்லை. ஒரு வேளை அப்படி ஆகலாம். மாறியும் போகலாம். அக்கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும், கொள்கை, சித்தாந்தம் உடையன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சாதி ஒழிப்பு, ஜனநாயக உரிமைகள், சிறுபான்மையினர் நலன் ஆகியனவற்றிற்காக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கிப் போராட வேண்டிய சூழலில்தான் நாடு உள்ளது. அந்த வகையில் இந்தக் கூட்டணி நல்லதுதான்.

ஆனால் இதுவே தேர்தல் கூட்டணியாக மாறும் வேளையில், அது அ.தி.மு.க.விற்குத்தான் உதவும் என்பதில் ஐயமில்லை. இன்றைய தமிழ் நாட்டுச் சூழலில், மூன்றாவது அணி ஆட்சி அமைப்பது என்பதெல்லாம் வெறும் கற்பனையே. தி.மு.க அல்லது அ.தி.மு.க. தலைமையில் அமையும் அணியே ஆட்சிக்கு வர முடியும் என்பது  எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆதலால், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறினால், அது யாருக்கு நன்மை பயக்கும்? அப்போது மக்கள் நலக் கூட்டணி, அம்மா நலக் கூட்டணியாகத்தானே உருவெடுக்கும். . ஒருவேளை, சி.பி.எம். கட்சிக்கு அதுதான் நோக்கமோ என்னவோ!

 

Leave a Response