ஜெயஸ்ரீ கொலையாளிகள் 15 நாட்களுக்குள் தண்டிக்கப்படவேண்டும் – கலப்பை மக்கள் இயக்கம் கோரிக்கை

ஜெயஸ்ரீ கொலையாளிகளை உடனே தண்டிக்க வேண்டும் என்றும் பெண் கொலை -சிறப்பு தடுப்புச் சட்டம் இயற்றப்படவேண்டுமென்றும் பாரத பிரதமருக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக கடந்த 40 நாட்களாகத் தொடர்ந்து அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.மே 12 அன்று திருப்போரூர்,கேளம்பாக்கம் பகுதிகளில் வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்கள் 100 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக அதன் தலைவர் பி.டி.செல்வகுமார் அரிசி மூட்டை மற்றும் காய்கறிகளை இலவசமாக வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது……..

விழுப்புரம் பகுதியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஜெயஸ்ரீ என்பவரை பட்டப் பகலில் பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளனர்.இந்த மாணவி கொலை ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.கொலை செய்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்,எந்த ஜாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும்,எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்,பாரபட்சம் பாராமல் மாணவி இறக்கும் தருவாயில்,கொடுத்த வாக்குமூலத்தைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் (தங்கள்
பிறந்தநாளில் நடந்த கொலையை கருதி ) சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா முழுவதுமுள்ள சிசு கொலை,கற்பழிப்பு கொலை,ஆசிட் ஊற்றி கொலை,நகைக்காக கொலை,வரதட்சணை கொலை,ஆகிய வன்கொலைகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.பெண்கள் மென்மையானவர்கள்,போற்றப்பட வேண்டியவர்கள்.

ஜெயஸ்ரீ என்பவரைக் கொலை செய்தது போன்று மீண்டும் கொலை நடைபெறாமல் இருக்க கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். சட்டத்தில் இவர்களுக்கு தண்டனை இருந்தாலும் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகிறர்கள்.ஆகவே பாரத பிரதமர் அவர்கள் (சிறப்பு )புதிய சட்டம் ஒன்றை இயற்றி,பெண்களைக் கொடூர கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வழி வகை செய்ய வேண்டும்.15 நாட்களுக்குள் வழக்கை முடித்து தண்டனை வழங்க வேண்டும்.அப்போது தான் குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும். கொலை சம்பவங்கள் குறையும்.

ஆகவே கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாரத பிரதமர் அவர்கள் அவசரமாகச் சட்டம் இயற்றி இந்த கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.அப்போது தான் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதோடு,நிம்மதியாக இந்த மண்ணுலகில் வாழ முடியும்.

செவிலியர் தினத்தை முன்னிட்டு நிறைய செவிலியர்களுக்கு உதவிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.குடும்பத்தைத் துறந்து கொரோனா காலத்திலும் அவர்கள் செய்யும் சேவையையும், தியாகத்தையும் பாராட்டுவோம்.

இவ்வாறு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேசினார்

அரிசி வழங்குவதற்கு உதவிய தயாரிப்பாளர், நடிகர் கதிர், செட்டிக்குளம் ஆசிரியர் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் வீ.கே.வெங்கடேசன்,வேண்டரசி,ரமணன்,தங்கபாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்வில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து,அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது.

Leave a Response