இவருக்கு மட்டும் `சரக்கு` எங்க கிடைக்குது? – கணக்கு சொல்லி மாட்டிக் கொண்ட மதுவந்தி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மீண்டும் அது நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மார்ச் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கைதட்டச் சொன்னார்.

அதன்பின், கடந்த 5 ஆம் தேதி, இரவு 9 மணியிலிருந்து 9 நிமிடங்களுக்கு வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றவும் நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

விளக்கு ஏற்றுவதன் பின்னணியில் எவ்வித அரசியல், அறிவியல் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியிருந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகள் சிலர் அவர்களாகவே, சிலதை உருவகப்படுத்திக்கொண்டு கருத்துகளை வெளியிட்டனர்.

நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் மகள் மதுவந்தி விளக்கேற்றுதல் குறித்து வெளியிட்ட கருத்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.அவர், “9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை ஏற்றும்போது 9 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வருவதாக வானியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதன் மூலம் கொரோனாவின் சக்தி குறையும்” என்று சொல்லியிருந்தார்.

அது கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

இந் நிலையில், இரண்டாவது காணொலியை வெளியிட்டிருக்கிறார்.அதில் சொல்லும் தகவல்களுக்கு ஆதாரமாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையை சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடியை அவர்களது வங்கிக் கணக்கில் ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் மோடி செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் மதுவந்தி. இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையின் கூட்டுத்தொகை கூட 8,000 கோடி வராது. அவர் வழியிலேயே சென்றாலும், 8,000 கோடி பேருக்கு ரூ. 5,000 கோடியை பிரித்துக் கொடுத்தால் ஒருவருக்கு 1 ரூபாய் கூட தர முடியாது. அதுமட்டுமா, 30,000 கோடியில் 40 சதவீதம் 20,000 கோடி என்கிறார். அனைத்தும் பெண்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். மொத்த ஜன் தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையே 36.25 கோடிதான்

இந்த உண்மைகளுக்கு மாற்றாக அவர் சொல்லியிருக்கும் கருத்துகளுக்குக் கடும் எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன.இந்த விவகாரம் #மதுவந்தி என்ற குறிச்சொல்லுடன் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

அவற்றில்…

மடக்கணக்கு மடக்கணக்கு என்று சொல்லுவார்கள் இன்று அந்த கணக்கை
@YGMadhuvanthi அவர்கள் மூலம் கேட்டுவிட்டேன்..இன்று முதல் நீங்கள் மடக்கணக்கு மதுவந்தி என்று அன்போடு அழைக்கப்படுவீர்…

#மதுவந்தி
இதுக்கு மட்டும் எந்த கடையில் சரக்கு கிடைக்குது Thinking face

இவைபோல ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன.

Leave a Response