தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று – அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோன வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் இதனைத் தெரிவித்து உள்ளார்.

கொரோனா உறுதியான 5 பேருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களில் நால்வர் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்றும் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சென்னையைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Response