திமுக சட்டமன்ற உறுப்பினர் திடீர் மரணம்

திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி (வயது 58) உடல் நலக்குறைவால் காலமானார். திருவொற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது.

மறைந்த கேபிபி சாமி,2006 – 11 திமுக ஆட்சிக் காலத்தில் மீன் வளத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். திமுகவின் மீனவரணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

1962 ஜூலை 1 ஆம் தேதி பிறந்த இவர் இன்று அதிகாலை காலமானார். இவருடைய திடீர் மரணம் திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் வடசென்னை திமுகவில் மிகவும் செல்வாக்காக இருந்தவர். அவருடைய சகோதரர்களும் அப்ப்குதியில் முக்கிய புள்ளிகளாக இருக்கின்றனர்.

Leave a Response