சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

இலங்கையில் நேற்று (04.02.2020) நடைபெற்ற உள்ள 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடப்பட்டுள்ளது.

முன்னதாக, 1949 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் சுதந்திர தின விழாவில் தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதன்பின் இந்த நடைமுறை மாற்றப்பட்ட நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நல்லிணக்கத்துக்கு வழி செய்யும் வகையில் மீண்டும் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழிலும் தேசியகீதம் பாடப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த முறையை மாற்றியிருக்கிறது சிங்கள அரசு. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர், இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா வந்த இலங்கை அதிபரை வரவேற்று நிதியுதவி அளித்தது இதற்காகவா? இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவிக்க பிரதமர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response