இந்தித் திணிப்பு குறித்து ரஜினி கருத்து

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடையே சில விநாடிகள் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது….

பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும், எங்கள் ரசிகர் மன்றங்களிலும் அமைப்புகளிலும் இதை நீண்ட நாட்களாகவே கடைபிடித்து வருகிறோம்.

ஒரு நாட்டுக்கு பொதுவான மொழி இருப்பது நல்லது. துரதிருஷ்டவசமாக நம் நாட்டில் அப்படி செய்ய முடியாது.

குறிப்பாக,இந்தி மொழியைத் திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தென்னிந்தியா மட்டுமல்ல வடக்கிலும் பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Leave a Response