ஈரோட்டைத் தொடர்ந்து திண்டுக்கல் காரைக்குடியால் கிடைத்த பெருமை

ஒரு உற்பத்திப் பொருள், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துக்கு சொந்தமானது என்பதை அங்கீகரிப்பதற்காக, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

1999 ஆம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு இந்திய அரசு கொண்டு வந்தது.

இதன் மூலம், புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்களை மற்ற பகுதியினர் விற்பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படுகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் பூட்டு மற்றும் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கமும், ராஜூவ்காந்தி கைத்தறிநெசவாளர் கூட்டுறவு சங்கமும் 2013 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு கோரியிருந்தது.

புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு 150 ஆண்டுகளுக்கு முன் சங்கரலிங்காச்சாரி சகோதரர்களால் தயாரிப்பு துவங்கப்பட்டது. பல்வேறு வடிவங்களில் தனித்தன்மையுடன் தயாரிக்கப்பட்டு வரும் திண்டுக்கல் பூட்டு பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. 2013 ம் ஆண்டு பூட்டு தொழிலாளர்கள் சங்கத்தால் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இதேபோல், காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

தமிழகத்தைச் சேர்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது பெருமைக்குரிய செய்தி என்கிறார்கள்.

Leave a Response