அரசு மருத்துவமனையில் இரத்தம் இல்லை உடனே களமிறங்கிய சீமான்

நாம் தமிழர் கட்சி இன்று, தம் கட்சித் தொண்டர்களுக்கு ஓர் அறிவுறுத்தல் செய்துள்ளது.
அதில்….

சென்னை, மத்திய தொடர்வண்டி நிலையம் அருகே அமைந்துள்ள இராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையில் குருதியின் கையிருப்பு முழுவதுமாகத் தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிவித்திருக்கிறது.

இதனால், நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய குருதியின்றி மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையினைப் போக்க நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை தனது பங்களிப்பைச் செலுத்த விழைகிறது.

எனவே, நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தர அணியமாவோம்!

ஆதலால், இன்றுமுதல் நாம் தமிழர் உறவுகள் இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று குருதிக்கொடை செய்யுமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்களும், தொகுதிப் பொறுப்பாளர்களும் இணைந்து இப்பெரும் பணியினை முன்னெடுக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:

திரு. அரிமா மு.பெ.செ.நாதன் – 76674 12345 /88254 13664

திரு. சுகுமார் – 98411 86128

திரு. தம்பி மணி – 81225 40511

மருத்துவமனை தொடர்புக்கு:

மருத்துவர் சுபாசு – 93817 15141
அரசு தலைமை மருத்துவர் குருதிப் பிரிவு

இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response