மே 23 இல் ராகுல்தான் பிரதமர் – கருத்துக்கணிப்பு முடிவுகள்

மே 23 முடிவு எப்படி இருக்கும்?

யார் ஆட்சி அமைப்பார்கள்?

பிஜேபி மோடி பிரதமர் ஆக முடியுமா??

காங்கிரஸ் கூட்டணி: 204 – 224 (காங்கிரஸ் தனியாக 145 – 165)
பிஜேபி கூட்டணி: 178 – 198 (பிஜேபி தனியாக 140 – 160)
மற்றவர்கள்: 133 – 153

காங்கிரஸ் கூட்டணி பிஜேபி கூட்டணியை விட குறைந்த பட்சம் 30 இடங்களுக்கு மேல் பெறும்..

மேலே சொன்ன எண்ணிக்கையில் பிஜேபி கூட்டணி இன்னும் குறையவே வாய்ப்பிருக்கிறது.. கூட வாய்ப்பேயில்லை..

காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் மாநிலங்கள் (5 தொகுதிக்கு மேல் உள்ள மாநிலங்கள்): தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், சத்தீஸ்கர், காஷ்மீர்

பிஜேபி கூட்டணி வெற்றி பெறும் மாநிலங்கள் (5 தொகுதிக்கு மேல் உள்ள மாநிலங்கள்): மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, டெல்லி, உத்தராகண்ட்

மாநில கட்சிகள் வெற்றி பெறும் மாநிலங்கள் (5 தொகுதிக்கு மேல் உள்ள மாநிலங்கள்): மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, உத்தர பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா

காங்கிரஸ் பிஜேபி இழுபறி: பீகார், மத்திய பிரதேசம், அஸ்ஸாம்

காங்கிரஸ், பிஜேபி கூட்டணியில் இல்லாதவர்கள்.. (5 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் கட்சி)

மம்தா: 30 (+/- 3)

மாயாவதி: 25 (+/- 3)

அகிலேஷ்: 23 (+/- 3)

YSR ஜெகன் மோகன்: 16 (+/- 2)

சந்திரசேகர் ராவ்: 13 (+/- 2)

BJD நவீன் பட்நாயக்: 13 (+/- 2)

கம்யூனிஸ்ட்: 10 (+/- 2)

சந்திரபாபு நாயுடு: 9 (+/- 2)

1. காங்கிரஸ் கூட்டணி பிஜேபி கூட்டணியை விட குறைந்த பட்சம் 30 இடங்களுக்கு மேல் பெறும்..

2. மம்தா, மாயாவதி, அகிலேஷ், கம்யூனிஸ்ட், சந்திரபாபு நாய்டு (மொத்தம் 90-100 சீட்) பிஜேபிக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பேயில்லை… YSR, BJD, KCR (மொத்தம் 40-45 சீட்) பிஜேபிக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பிருக்கிறது..

3. காங்கிரஸ் தனியாக 150, கூட்டணி 210 இடங்களை தாண்டிவிட்டால்.. UPA கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ராகுலை பிரதமராக முன்மொழிவார்கள்.. இந்த சூழலில் மம்தா, மாயாவதி, அகிலேஷ், கம்யூனிஸ்ட், சந்திரபாபு நாய்டு என்று எல்லோரும் ஒரு மனதாக ராகுலை ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது.. மாயாவதி துணை முதல்வர் ஆகலாம்.. மம்தா மாநில அரசியலை தாண்டி வர வாய்ப்பு கம்மி.. ராகுல் பிரதமர் ஆக தான் வாய்ப்பு அதிகம்.. 80% இது தான் நடக்கும்..

4. ஒரு வேளை காங்கிரக்கு 130-150ம்.. காங்கிரஸ் கூட்டணிக்கு 180-200ம் கிடைத்தால்.. காங்கிரஸ் கட்சியில் இருந்து மன்மோகன், சிதம்பரம் போன்ற யாராவது ஒருவரை காங்கிரஸ் முன் நிறுத்தலாம்.. 10% இதற்க்கு வாய்ப்புள்ளது.

5. ஒரு வேளை காங்கிரஸ் 130க்கு கீழும் காங்கிரஸ் கூட்டணி 180க்கு கீழும் இருந்தால்.. வேறு கட்சியில் இருந்து ஒரு பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் ஆதரிக்கும்.. 10% இதற்க்கும் வாய்ப்புள்ளது..

6. பிஜேபி கூட்டணி 235 இடங்களை தாண்டவில்லையென்றால் என்ன முயற்சி செய்தாலும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை.. என்னோட கணிப்பு பிஜேபி கூட்டணிக்கு அதிகபட்சம் 198.. (178 – 198)..
பிஜேபி மறுபடி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை..

எக்ஸிட் போல் ஒருவேளை பிஜேபி கூட்டணி காங்கிரஸ் கூட்டணியை விட 20-30 சீட் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சொல்லலாம்.. ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை..

குஜராத், கடைசியாக நடந்த 5 மாநில தேர்தல் எல்லாவற்றிலும் மற்ற கணிப்புகளை விட எனது கணிப்பு கிட்டத்தட்ட சரியாக இருந்து இருக்கிறது🙂..

மக்களின் எதிர்ப்பு அலையை புரிந்துகொள்ளாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வந்த அனைத்து கருத்துக்கணிப்புகளும் தோல்வியில் தான் முடிந்துள்ளது.. ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள மக்கள் மனநிலையை சரியாக யாரும் கணிக்க முடிந்ததில்லை என்பதற்கு சில உதாரணங்கள்..

A). 2004 தேசிய தேர்தல் – வாஜ்பாய் புகழ் உச்சக்கட்டம்.. காங்கிரஸ் 1999ல் வாங்கிய தோல்வியில் இருந்து பெரிதாக எழமுடியாமல் சோனியா காந்தியை மட்டுமே முழுமையாக நம்பி இருந்த காலம்.. ஒரு புறம் “கார்கில் வீரர் வாஜ்பாய்”, “இந்தியா ஒளிர்கிறது”, “சோனியா இத்தாலி அடிமை” இது போன்ற பிஜேபி கோஷங்கள்.. பெரிய அளவில் வெளியில் வாஜ்பாய்க்கு எதிர்ப்பு அலை தெரியவில்லை.. தேர்தலுக்கு முந்தைய அனைத்து கருத்து கணிப்புகளும் பிஜேபி கூட்டணி 285-300 இடங்களில் வெற்றி பெறும்.. காங்கிரஸ் கூட்டணி 120 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தது.. ஆனால் முடிவில் பிஜேபி கூட்டணி 181 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 218 இடங்களிலும் வெற்றி பெற்றது..

B). 2017 குஜராத் தேர்தல் – கருத்துகணிப்புகளின் சராசரி பிஜேபி 124 இடங்களுக்கு அதிகமாக வெற்றி பெறும்.. காங்கிரஸ் 58 இடங்களில் வெற்றி பெறும்.. பிஜேபி சொன்னது 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று.. நடந்தது பிஜேபி 99, காங்கிரஸ் 80..

C). 2018 சத்தீஸ்கர் தேர்தல் – கருத்துகணிப்புகளின் சராசரி பிஜேபி 45-50 இடங்களுக்கு அதிகமாக வெற்றி பெறும்.. காங்கிரஸ் 35-40 இடங்களில் வெற்றி பெறும்.. நடந்தது பிஜேபி 15, காங்கிரஸ் 68..

இதைப்போல நிறைய உதாரணம் சொல்லலாம்..

நான் எப்படி கணிக்கிறேன்??

என்னோட கணிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனிப்பட்ட அரசியல் கணிப்பாளர்களின், பத்திரிக்கையாளர்களின் தகவல், மாநில அளவில் நடந்த கருத்து கணிப்பு, பதிவாகிய வோட்டு சதவிகிதம், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்கள் , கல்லூரி/ பல்கலை தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள், சட்டசபை தேர்தல்கள், இப்போதுள்ள கூட்டணி சூழல், கட்சிகளின் ஓட்டு சதவிகிதம் வளர்ச்சி/ வீழ்ச்சி, மக்களின் மனநிலை இதையெல்லாம் ஆய்வில் கொண்டு கணிக்கப்பட்டது..

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கட்சி குறைந்தபட்சம் (Min) அதிகபட்சம் (Max) வெற்றி பெறும் இடங்கள் என்று கணித்து கடைசியில் அதன் சராசரி.. சராசரியில் +/- 10 சீட்.. எனது கணிப்பு அஸ்ஸாமுக்கு தவறாக இருக்கலாம்.. பிஹாருக்கு சரியாக இருக்கலாம்.. கடைசியில் சராசரி எடுக்கும் போது மொத்த எண்ணிக்கை சரியாக நாம் கணித்தது போல வர வாய்ப்புகள் அதிகம்..

ரொம்ப எளிமையாக சொன்னால்.. மே 23ல் முடிவு வரும் போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க 55-65 இடங்கள் குறைவாக இருக்கும்…பிஜேபி கூட்டணி ஆட்சி அமைக்க 85-95 இடங்கள் குறைவாக இருக்கும்..

மற்றவை எல்லாம் மே 23 கூட்டணி முடிவை பொறுத்து தான்..

மே 23ல் பிஜேபி கூட்டணி நான் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட குறையவே வாய்ப்பிருக்கிறது.. கூட வாய்ப்பேயில்லை.. பிஜேபி ஆட்சி அமைக்க வாய்ப்பேயில்லை..

நன்றி சுவாதி

Leave a Response