51 தொகுதிகள் 5 ஆம் கட்டத் தேர்தல் – களத்தில் சோனியா ராகுல்

இந்தியா முழுவதும் 7 மாநிலங்களில் 51 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இது 5 ஆம் கட்டத் தேர்தல்.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், ஏப்ரல் 11, 18, 23, 29 ஆம் தேதிகளில் 4 கட்டத் தேர்தல்கள் முடிந்தன. இதுவரை மொத்தம் 374 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்பட 7 மாநிலங்களில் 5 ஆம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 7 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள் என மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இவற்றில் மொத்தம் 674 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்துடன் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் தொகுதியில் 3 ஆம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

இன்றைய தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் ராத்தோர், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மத்திய அமைச்சர்கள் ஜெயந்த் சின்ஹா, அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

தேர்தல் நடக்க் 51 தொகுதிகளில், 4.63 கோடி ஆண் வாக்காளர்கள், 4.12 கோடி பெண் வாக்காளர்கள், 2,214 திருநங்கைகள் என மொத்தம் 8 கோடியே 77 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று, சுமார் 90,000 வாக்குச்சாடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்குவங்கத்தில் கடந்த தேர்தல்களில் வன்முறை, கொலை போன்ற சம்பவங்கள் நடந்ததால், அம்மாநிலத்தின் 7 தொகுதிக்கான வாக்குச்சாவடிகளும் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response