இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக – வேலூர் தொகுதி தேர்தல் இரத்து

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மேற்கொள்ள பெருமளவு பணம் இறங்கியுள்ளது என கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ. 11 கோடிக்கு மேல் பணம் சிக்கியது. இதனையடுத்து தேர்தல் அத்தொகுதியில் ரத்து செய்யப்படுமா? என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு திங்கட்கிழமை பரிந்துரை செய்தது என தகவல் வெளியாகியது. இன்று காலையில் தேர்தல் ஆணையம் எந்தஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என மறுத்தது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி கையெழுத்திட்டதும் ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி ஒன்றில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Response