
டென்மார்க் இல் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக ஒரு தமிழர் ஒருவரும் போட்டியிடவுள்ளார்.
டென்மார்க் வாழ் தமிழ் மக்களில் 40 வீதமானோர் வாழ்கின்ற vestjylland Storkreds: Herning, Ikast-Brande, Ringk�bing-Skjern, Skive,Holstebro, Viborg, Silkeborg, Stuer, Lemvig ஆகிய பகுதிகளில் கஜேந்திரன் சிறிசுரேந்திரன் (கஜன்) அவர்கள் போட்டியிடுகின்றார் என அறியப்படுகின்றது.
25 ஆண்டு காலமாக புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் டெனிஸ் மக்களுடன் நட்புறவோடு கூடி வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழ்மக்கள் மத்தியில் ஈழத் தமிழர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுப்பது என்பது இதுவே முதல் தடவையாகும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
வெற்றி பெற வாழ்த்துக்கள் – செந்தமிழினி பிரபாகரன்.
