
ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு, நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மாலதி, திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் வினோதினி ஆகியோரை ஆதரித்து,
நாம் தமிழர் கட்சி சார்பில் பரப்புரைக் கூட்டம் திருவாரூர் பனகல் சாலையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சீமான் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அந்தப்பக்கமாக திமுக கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் வந்திருக்கிறார்.
காரில் இருந்தபடி சில நிமிடங்கள் சீமான் பேச்சைக் கேட்ட அவர், பிறகு காரிலிருந்து இறங்கி மேடைக்கு முன்பாக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து முழுமையாகக் கேட்டிருக்கிறார்.
சீமான் பேச்சை முடித்தவுடன் மேடைக்குச் சென்ற திமுக கூட்டணி வேட்பாளர் செல்வராஜ், பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது என்று பாராட்டினார்.
சுவாரசியமான இந்த நிகழ்வை நாம் தமிழர் கட்சியினர் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி வருகின்றனர்.


