முந்திய பாஜக முழித்துக்கொண்ட காங்கிரசு – ராகுல் வருகை சுவாரசியம்

அரசியல் கட்சிகளுக்கிடையேயான போட்டிகள் சமுகவலைதளங்களில் தீவிரமாக எதிரொலிக்கின்றன.

மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக தமிழ்மக்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள்.
அதன்விளைவாக அவர் வரும்போதெல்லாம் டிவிட்டரில் கோ பேக் மோடி என்கிற குறிச்சொல்லை வைத்து அவருக்கு எதிர்ப்பைத் தெரிவித்துவந்தார்கள்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி சென்னை வருவதையொட்டி கோ பேக் ராகுல் என்கிற குறிச்சொல் உருவாக்கி அதை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

இதை காங்கிரசார் சற்றும் எதிர்பார்க்கவில்லை.அந்தச் சொல் டிரெண்ட் ஆனதும் விழித்துக் கொண்ட காங்கிரசார், வணக்கம் ராகுல்காந்தி என்கிற குறிச்சொல்லை உருவாக்கி அதை பரப்பிவருகின்றனர்.

இப்போது அவ்விரண்டு சொற்களும் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

Leave a Response