கட்சிக்கு தனி சின்னம் – தேர்தல் ஆணையத்துக்கு கமல் நன்றி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது .

இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வருகிறது.

இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடும் என்று உறுதியாகி உள்ளது.

இதுவரை மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடனும் கூட்டணி வைக்கவில்லை.

மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் தனியாகப் போட்டியிடும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.

இதற்காக அவர் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர் நேர்காணல் தற்போது மக்கள் நீதி மையம் சார்பாக நடந்து வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தற்போது அங்கீகாரம் பெறாத கட்சி. அதனால் தேர்தலில் அவர்கள் விரும்பிய சின்னத்தில் போட்டியிட முடியாது.

ஆனால் விரும்பிய சின்னம் குறித்து கோரிக்கை வைத்து அது இருக்கும் பட்சத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பொதுச் சின்னத்தில் உள்ள பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது.

இந்த தேர்தலில் இந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Response