எச்.ராஜா தந்தி டிவி பாண்டே ஆகியோரின் பொய் – சான்றுடன் அம்பலமானது

மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோ பேக் மோடி என்கிற சொல் ட்விட்டர் தளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. இது தமிழகத்திலிருந்து வரவில்லை பாகிஸ்தானின் சதி என்று எச்.ராஜா, ரங்கராஜ் பாண்டே போன்றோர் வெளிப்படையாகக் குற்றம் சொன்னார்கள்.

ஆனால் அது தமிழகத்திலிருந்துதான் அதிகம் வருகிறது என்பதை சான்றுகளுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் பிபிசி செய்தியாளர் முரளிதரன். அவருடைய பதிவில்….

தமிழ்நாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி விஜயம் செய்யும்போதெல்லாம் #GobackModi என்ற ஹாஷ்டாகை எதிர்க்கட்சிகள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். கடந்த முறை மோதி கன்னியாகுமரிக்கு வந்தபோதும் இதேபோல நடந்தது.

ஆனால், இதனைச் செய்தது தமிழர்கள் அல்ல. பாகிஸ்தானியர்கள். குறிப்பாக ஐஎஸ்ஐ இதற்குப் பின்னால் இருக்கிறது என்ற கருத்தை பா.ஜ.க பிரமுகர்கள் பரப்பினார்கள்.

ட்விட்டர் உலகில் மிகப் பிரபல ஹேக்கரான எலியட் ஆல்டர்சன் ( @fs0c131y ) இப்போது ஒரு ஆய்வைச் செய்திருக்கிறார். மார்ச் ஆறாம் தேதி சென்னைக்கு மோதி வந்தபோது ட்ரெண்ட் செய்யப்பட்ட ட்வீட்களை அவர் ஆய்வுசெய்து, அவை எங்கிருந்து பதிவுசெய்யப்பட்டன, எந்தெந்த ட்வீட்டர்கள் அதில் தீவிரமாக ஈடுபட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

#GoBackSadistModi என்ற ஹாஷ்டாகுடன் கூடிய 68543 ட்வீட்களை அவர் முதலில் ஆராய்ந்திருக்கிறார். மோதிக்கு எதிரான மேலும் சில ஹாஷ்டாகுகள், அன்று ட்ரெண்டான வேறு சில ஹாஷ்டாகுகளையும் அவர் ஆராய்ந்திருக்கிறார்.

அந்த ஹாஷ்டாகுகளும் அவற்றின் கீழ் பதிவான ட்வீட்களின் எண்ணிக்கையும் இதுதான்:

#gobacksadistmodi – 41174
#gobackmodi – 16818
#gobackmodii – 1631
#whereismugilan – 1566
#rafaledeal -1437
#rafalescam – 1197
#tnwelcomesmodi – 681
#gobackantinationalmodi – 657
#admkfails – 477
#bjpfails – 476

அன்றைய தினம் மிகத் தீவிரமான ட்வீட்களைப் பதிவுசெய்த பதிவர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இவர்கள் ஒவ்வொருவரும் அந்த நாளில் 350 முதல் 200 வரையிலான ட்வீட்களை பதிவுசெய்திருக்கிறார்கள்.

அன்றையை ட்வீட்களில் அதிகம் பகிரப்பட்ட படங்களையும் அவர் தொகுத்திருக்கிறார்.

முதலிடத்தில் இருப்பது கருணாநிதியும் துரைமுருகனும் சிரிக்கும் படம்.

மொத்த ட்வீட்டர்களில் தாங்கள் எந்த இடத்திலிருந்து ட்வீட்டை பதிவுசெய்கிறோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்த பதிவர்கள் 30 சதவீதம் பேர். எந்தெந்த இடங்களிலிருந்து இந்த ட்வீட்கள் பதிவாயின என்ற பட்டியலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழ்நாட்டிற்கு வெளியில் இருப்பது பெங்களூருவும் புதுதில்லியும்தான்.

மிகத் தீவிரமாகச் செயல்பட்ட பதிவர்களின் பெயர்களையும் ஆல்டர்சன் வெளியிட்டிருக்கிறார். அதில் முதலிடத்தில் இருப்பவர், நண்பர் பிறை கண்ணன் @piraikannan.

ஆக, இந்த மோதி எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது என்று முடித்திருக்கிறார் ஆல்டர்சன்.

Leave a Response