விஜயகாந்த் நலமாக இருக்கிறார் – தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி

கடந்த ஜூலை மாதம் விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். ஒரு மாத காலம் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்ற அவர், ஆகஸ்ட் மாதத்தில் தமிழகம் திரும்பினார்.

அதன்பின்,கடந்த சில நாட்களுக்கு முன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். மனைவி பிரேமலதா உடன் சென்றார்.

இந்நிலையில் அவர் உடல்நலம் மோசமடைந்துள்ளதாக செய்திகள் வந்தன.

இதனால் தேமுதிக தொண்டர்களிடம் பதட்டம் ஏற்பட்டது.

அவர் நலமுடன் இருப்பதாக தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு,விஜயகாந்த் அமெரிக்காவிலுள்ள நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார். இதுதொடர்பான படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் படங்களை தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துவருகின்றனர்.

Leave a Response