இனி தமிழில் மட்டுமே கையெழுத்து என்ற நடிகருக்குக் குவியும் பாராட்டுகள்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் , இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்,

உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ்…இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் … #தமிழ்விதியெனசெய்

என்று பதிவிட்டதோடு தன்னுடைய தமிழில் போடப்பட்ட கையெழுத்துப் படத்தையும் பகிர்ந்திருந்தார்.

இதனால் ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பது நடிப்பது ஆகியனவற்றோடு நில்லாமல் எல்லாச் சமுதாயச். சிக்கல்கள் பற்றி கருத்துச் சொல்வது, பல மக்கள் நலப் போராட்டங்களில் பங்களிப்பு செய்வது என்று சமுதாய அக்கறையோடு இருக்கும் அவர் இப்போது மொழி பற்றிய அக்கறையோடு தமிழில் மட்டும்தான் கையெழுத்து போடுவேன் என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.

Leave a Response