நிவாரணப் பொருட்களோடு கேரளா சென்றார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருவெள்ளத்தின் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிற மலையாளச் சகோதரர்களுக்கு தமிழ் மக்கள் தங்களது இருகரங்களை நீட்டி உதவ வேண்டும் என அன்புரிமையோடு வேண்டுகிறேன். மானுடத்தோடு மலையாள மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கு உறுதிபூண வேண்டுமெனக் கோருகிறேன்

என்று சில நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மலையாளச் சகோதரர்களுக்கு மானுடத்தோடு மலையாள மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யும் நோக்கில்,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு இன்று 25-08-2018 மாலை 05 மணியளவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்கு விரைகின்றனர்.

என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response