தமிழக தொழிலாளர்களுக்கு துரோகம் செய்த பிக்பாஸ் – கமலும் உடந்தையா?

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில், மும்பையில் இருந்து வரும் தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சென்ற ஆண்டில், இந்தப் பிரச்னை பெரிதான போது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் குஷ்பு தலையிட்டு சமரசம் செய்து வைத்திருக்கிறார்.

பிக்பாஸ் வித்தியாசமான நிகழ்ச்சி, இது தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு புரியாது. எனவே 50 % ஆட்களைப் ஃபெப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த சீசன்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் தமிழ் சினிமாவிலிருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது. ஆனால், இப்போது 10% ஃபெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று வருத்தப்படுகிறார் ஆர்.கே.செல்வமணி.

ஃபெப்சிக்கும் எண்டமோள் நிறுவனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படும் என ஜூன் 30 -ஆம் தேதி வரை காத்திருக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஃபெப்சி அமைப்பு பிக் பாஸ்-2 நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என இன்று (ஜூன் 29) எண்டமோள் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கிறது. நீதிபதி சதீஷ் குமார் இந்த இடைக்காக தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

ஒரு பக்கம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் நீதிமன்றம் சென்று தடை பெற்றிருப்பது தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த துரோகத்துக்கு கமலும் உடந்தையா? என்பது இப்போது பெரிய கேள்வியாக இருக்கிறது.

Leave a Response