மு.க.ஸ்டாலின் முதல்வராக வாழ்த்துகிறேன் – நடிகரின் கருத்தால் பரபரப்பு

2012 ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு படம் தொடங்கி 2013 இல் வெளியான சூதுகவ்வும் படத்தில் புகழ்பெற்றவர் நகைச்சுவை நடிகர் கருணாகரன்.

அதன்பின் ரஜினியுடன் லிங்கா, அஜீத்துடன் விவேகம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போதும் ஒரு டஜன்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளமான டிவிட்டரில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர்.

இன்று அவர் வெளியிட்ட ட்விட்டரால் பரபரப்பு காணப்படுகிறது.

அவர், நான் திமுகவை ஆதரிக்கிறேன். மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக வாழ்த்துகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

கருணாகரனின் இந்த அரசியல் ட்வீட் காரணமாக ஏராளமானோர் அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Response