
அமெரிக்காவில் நாளை ரஜினி நடிக்கும் “காலா” திரை அரங்கில் வருகிறது!
உங்களை சென்று இந்த திரைப் படத்தை திரைஅரங்கில் பார்க்காதீர்கள் என்று சொல்ல மாட்டேன், அது உங்கள் உரிமை..அதில் தலையிட எனக்கு உரிமையில்லை!
ஆனால் சில முக்கியமான ஒரு சில கருத்துகளை சொல்வது என் கடமை!
எல்லா திரைப் படங்களும் $10 முதல் $15 வெள்ளிகள் இருக்கும், ஆனால் இந்த திரைப் படம் $30 வெள்ளிகள் எனக் கேள்விப் பட்டேன்! அதாவது இந்திய ரூபாய்க்கு [30 * 67 = ரூ 2010] ஒரு டிக்கெட்டின் விலை – மூன்று அல்லது நான்கு நபர்கள் குடும்பத்தோடு சென்றால் கிட்டதட்ட
ரூ 6000 முதல் ரூ 8000 வரை செலவு ஆகலாம்! அமெரிக்க வெள்ளியில் கிட்டதட்ட $90 முதல் $120 வரை செலவு ஆகலாம்! இவ்வளவு பணம் கொடுத்து அந்த படத்தை இந்த வாரம் பார்க்க வேண்டுமா? என்று யோசியுங்கள்!
10 நாட்கள் கழித்து சென்றால் அதே படம் $10 வெள்ளிகளுக்கு கிடைக்கும்! படம் நன்றாக இல்லை என்றால், இணையத்தில் வீட்டிலேயே பார்த்து விடலாம்!
சிந்திப்பீர் – செயல் படுவீர்!
மற்றப்படி அவர் தூத்துகுடி பயணத்தில் “பொதுமக்களை” சுட்டு கொன்ற காவல்துறையை கண்டிக்கவில்லை என்றோ –
போராடிய மக்களை “சமூக விரோதிகள்” என்று சொன்னார் என்றோ-
இப்படி எதற்கு எடுத்தாலும் போராடினால் “தமிழ் நாடு சுடுகாடு” ஆகிவிடும் என்று சொன்னார் என்றோ-
ஆன்மிகத்தில் இருக்கும் ஒரு நபர் – நிருபரை ஏய் ஏய் என்று சொன்னார் என்றோ –
அதற்காக நான் உங்களை “காலா” பார்க்காதீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்!!!
நீங்கள் பனியிலும், வெயிலில் சம்பாரித்த பணம் – பார்த்து செலவு செய்யுங்கள் – அந்த உரிமையில் சொல்கிறேன்!
– சிவகுமார்


