நள்ளிரவில் சந்தோஷை மிரட்டி வீடியோ எடுத்த ரஜினி ஆட்கள் – அதிர்ச்சிப் பதிவு

ரஜினியின் தூத்துக்குடி பயணத்தின்போது அவரை யார் நீங்க? என்று கேட்ட இளைஞர் சந்தோஷ் ரஜினி ரசிகர்களால் மிரட்டப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனையில் இருந்த திலீபன் மகேந்திரன் எழுதியுள்ள பதிவு…,

ரஜினியின் அயோக்கியத்தனம்…

சந்தோஷ் “நீங்க யார்”னு கேட்டத பொறுத்துக்க முடியாம, ஏர்போட்ல கலவரத்த தூண்டுனது சமூக விரோதிதான்னு கத்திட்டிருந்தான்..

அன்னைக்கே இந்திய அளவுல அவன் பேரும் அசிங்கப்பட்டுச்சி, இத தாங்கிக்க முடியாம முந்தா நேத்து நைட்டு 12 மணிக்கு ரஜினி ரசிகர் எங்கிற பேர்ல நாளைஞ்சி குண்டனுங்க ஹாஸ்பிட்டல் வாசல்ல போன் பேசிட்டிருந்த சந்தோஷ கூட்டமா வந்து மிரட்டிருக்கானுங்க…

ரஜினிய புனிதர்னு சொல்லு, நல்லவர்னு சொல்லு, மன்னிப்பு கேளுனு சொல்லி மிரட்டிருக்கானுங்க…

அவுங்க அம்மாவும் ரொம்பவும் பயந்துட்டாங்க.. போராட்டத்துல காயம்பட்ட எல்லாரும் தூங்கிட்டிருந்த டைம் வேர, நானும் அன்னைக்கு 10 மணிக்கே தூங்கிட்டேன்..

அப்போதைய நிலைமைய சமாளிக்க ரஜினி-ய பத்தி நா தப்பா ஏதும் சொல்லல, நான் சொன்னத வேர விதமா எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்கன்னு அப்போதைய நிலமைய சமாளிச்சிருக்கான்…

வருத்தமோ, மன்னிப்போ அவன் கேக்கல.. அந்த வீடியோ எடுத்த ரசினி ரசிக மெண்டல் முழுசாவும் அப்லோட் பன்ல.. வெட்டி ஒட்டிருக்கான்.

காலையில் எழுந்த உடனேதான் எனக்கு விஷ்யம் தெரியும். இல்லன்னா நானாவது சண்ட போட்ருப்பேன்… என்ன அடிச்சாலோ, கை கால் முறிச்சாலோ ரஜினிக்குதான் மறுபடி பிரச்சனை..

காலையில அவுங்க அம்மா வந்து தயவு செஞ்சி நீ கெளம்புப்பா தம்பி.. உனக்கு கைய உடைச்ச மாறி என் மவனுக்கும் கை, கால உடைச்சிட்டா என்னால தாங்கிக்க முடியாதுன்னு கலங்கிட்டாங்க..

ஏன்னா என்னாலதான் பிரச்சனை.

யார் நீங்க வீடியோவ முதல்ல அப்லோட் பன்னது நான் தான்… என்னோட சந்தோஷ் போட்டோ புடிச்சதாலதான் அவனையும் சமூக விரோதின்னு திட்ட ஆரம்பிச்சாங்க,

அன்னைக்கு நைட்டு 7 மணிக்கு சம்பந்தமே இல்லாம நக்கீரன்ல கடத்தல் வழக்கில் கைதுன்னு சந்தோஷ்-கூட நா எடுத்த போட்டோவ போட்டு நீயூசும் போட்டாங்க..

அன்னைக்கு நைட்டு 12 மணிக்கு அவ்ளோ போலிஸ் பாதுகாப்ப மீறி ஹாஸ்பிட்டல் மேல வந்து குண்டர்கள் மிரட்டியும் இருக்கானுங்க..

இதுக்கெல்லாம் காரணம் நான்-தான்னு சொல்லி ஹாஸ்பிட்டல் இருந்து போக சொல்லிட்டாங்க.. நா நேத்து காலையிலயே ஹாஸ்பிட்டல்-ல இருந்து கெளம்பிட்டேன்..

யார் நீ-னு கேட்டதுக்காக ஏற்கனவே அடிப்பட்டு தலையில தையல் போட்டுருக்கவன ஹாஸ்பிட்டல்லயே போய் மிரட்டிருக்கானுங்க.. சில்ரத்தனமான வேல.

அவன் சொல்றது உண்மதான் நான் யார்னு சந்தோஷ்க்கு தெரியாது.. ஹாஸ்பிட்டல் வந்துதான் அறிமுகம்..

ரஜினிய மட்டும் ஏன் கேள்வி கேட்டான்? ஏ ஓபிஸ் திட்டல? ஏன் கடம்புர் ராஜ திட்லனு கேட்டவங்களுக்கு கமெண்ட்ல ஆதாரம் இருக்கு..

நாசக்கார ஸ்டெர்லைட்-க்கு எதிரா மக்கள் போராடும்போது ஒரு அறிக்கை கூட விடாத ரஜினிய யார் நீங்கன்னு கேட்டதுல தப்பே இல்ல..

ஒரு சாமானியன் கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லாத ரசினிதான், தன் ரசிகன வச்சி போராட்ர மக்கள மிரட்டுரான்.

இனி சந்தோஷுக்கு மிரட்டலோ, பாதிப்போ ஏற்பட்ட அதுக்கு ரஜினிதான் மூழு பொறுப்பு…

சந்தோஷ்-தான் உண்மை-யான வேங்க மவன்.

நானும் உண்மைய சொன்னா மறுபடியும் ஹாஸ்பிட்டல் போய் மிரட்டுவானுங்கன்னு சொல்லிதான் அமைதியா இருந்தேன்..

ஆனா அந்த 1 நிமிஷ வீடியோ வச்சிக்கிட்டு அவன் தியாகத்தையே கொச்சப்படுத்துரானுங்க…

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response