பெண்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் போதைப் பொருள் – சாமியாரின் திடுக் லீலைகள்

2013-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆசிரமத்தில் 16-வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டது. இவர் மீதும் மேலும் இரு பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த ஆசாராம் பாபுவின் முக்கிய உதவியாளரும், ஆதரவாளருமான ராகுல் கே சச்சாரின் வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் நீதிபதி நேற்று 435 பக்கத்தில் தீர்ப்பளித்தார். அதில் ராகுல் கே சச்சாரின் வாக்குமூலம் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.

இதில் ஆசாராம் பாபு பெண்களை எப்படியெல்லாம் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தினார் உள்ளிட்ட பல பகீர் விஷயங்களை ராகுல் கே சச்சார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஆசாராம் பாபுவின் அந்தரங்க மாளிகையின் பொறுப்பாளராக ராகுல் இருந்துள்ளார். ஆசிரமத்தில் உள்ள வீடுகளில்தான் பெண்களை ஆசாராம் பாபு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ராஜஸ்தானின் புஷ்கர் நகரம், ஹரியானாவின் பிவானி நகரம், குஜராத்தின் அஹமதாபாத் ஆகிய இடங்களில் ஆசாராம் பாபுவின் ஆசிரமங்கள் உள்ளன. இந்த ஆசிரமங்களில் பெண்களை பலாத்காரம் செய்வதற்கென்ற தனி சொகுசு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளின் பொறுப்பாளராக ராகுல் இருந்தார்.

ஆசாராம் பாபு தனக்கு பிடித்தமான பெண்களை பலாத்காரம் செய்ய விருப்பப்பட்டால், அவரின் உதவியாளர்கள் 3 பெண்களிடம் ஒரு டார்ச்லைட்டை தூக்கிவீசி சைகை செய்வார். இந்த சைகை செய்தவுடன் அவர்கள் புரிந்துகொண்டு, அந்தப் பெண்களை சொகுசு இல்லத்தில் தங்க வைப்பார்கள். அன்று இரவு ஆசாராம் பாபு தனக்கு தேவையான பெண்களைத் தேர்வு செய்து பலாத்காரம் செய்வார் என்று ராகுல் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், ஆசாராம் பாபு ஒருநாள் அஹமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தின் சொகுசு இல்லத்தில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததை ராகுல் பார்த்துவிட்டார். அதன்பின் அது குறித்து ஆசாராம் பாபுவிடம் , உங்களைப் போன்றவர்கள் இப்படி செய்யலாமா என்று கேட்டு சண்டையிட்டுள்ளார். அதற்கு ஆசாராம் பாபு, ‘என்னைப் போன்ற புனிதமானவர்கள், ஞானிகள் பெண்களை பலாத்காரம் செய்வது பாவமில்லை’ என்று கொடுத்த விளக்கத்தில் தான் அதிர்ந்துவிட்டதாக ராகுல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஆசாராம் பாபு பெண்களைப் பலாத்காரம் செய்வது குறித்து பலமுறை கடிதம் வாயிலாகவும், நேரடியாகவும் ராகுல் கேள்வி எழுப்பியும் அவர் பதில் அளிக்கவில்லை. ஒருமுறை கடுமையாக வாக்குவாதம் செய்தபோது, பாதுகாவலர்களால் ராகுல் தாக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.

ஆசாராம் பாபு பெண்களைப் பலாத்காரம் செய்யும் முன் ஊசிகளையும், மருந்துகளையும் எடுத்துக் கொள்வார் என ராகுல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சில நேரங்களில் பெண்களுக்கும் ஓப்பியம் போன்ற போதைப்பொருட்களையும் கொடுத்து மயக்க நிலையில் வைத்துவிடுவார். ஓப்பியத்துக்கு சங்கேத வார்த்தை பிரசாதம்.

மேலும், பலபெண்களுக்கு ஆசிரமத்தில் கருக்கலைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக ராகுல் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஆசிரமத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடான சம்பவங்கள், பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்துதல் போன்றவற்றை தீவிரமாக ராகுல் எதிர்த்தபோது, அவரை ஆசாராம் பாபுவின் பாதுகாவலர்களும், ஆதரவாளர்களும் ராகுலை அடித்துத் துரத்தியுள்ளனர்.

ஆசாராம் பாபு மீதான பாலியல் வழக்கு தொடரப்பட்டு அவர் சிறைக்குச் சென்றபின், காவல்துறையில் அவர் குறித்து தனது வாக்குமூலத்தை ராகுல் சச்சார் தெரிவித்துள்ளார்.

Leave a Response