சிபிஎம் கட்சியின் புதிய பொதுச்செயலருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.


விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் புதிய பொதுச்செயலாளராக மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார்.

பொதுச்செயலாளர் போட்டியிலிருந்து ராமச்சந்திரன் பிள்ளை விலகியதை தொடர்ந்து 50 ஆண்டுகள் பழமையான அக்கட்சியின் 5வது பொதுச்செயலாளராக போட்டியின்றி யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் மத்திய குழு கூடி, யெச்சூரியை தேர்வு செய்ததாக, 3 முறை அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ள பிரகாஷ் காரத் அறிவித்தார்.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி தெரிந்ததும் திமுக துணைப்பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். அவருடைய வாழ்த்துச் செய்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு சீத்தாராம் எச்சூரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அப்பொறுப்பில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். வலுவான மற்றும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியை உருவாக்கி இந்திய ஜனநாயகத்தை பலப்படுத்தும் பணியில் அவர் ஈடுபடுவார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Response