நீங்கள் இப்படிச் செய்யலாமா கமல் சார்? – ஒரு ரசிகரின் வேதனை

கர்நாடகத்தைச் சேர்ந்த நாகேஷ் என் குருக்களில் ஒருவர், என் நண்பர்கள் திரு ராஜ்குமார், திருமதி சரோஜாதேவி, திரு ரஜினிகாந்த் மற்றும் திரு அம்பரீஷ் போன்றவர்கள் என் சொந்தங்கள். மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை குறித்த என் நகைச்சுவை அது. துணைவேந்தர் மீதான சாடல் அல்ல. எப்படியிருந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் தேவை

என்று கமல் சொல்லியிருந்தார்.

இதற்கு நிறைய எதிர்ப்புகள் வருகின்றன. அவற்றில் ஒன்று…….

இந்த பதிவு வேண்டாம் என்று தான் நினைத்து இவ்ளோ நேரம் பதிவிடாமல் இருந்தேன்.ஆனால் மனம் கேட்கவில்லை.
அதான் பதிவு செய்கிறேன்.

திடிரென்று நாகேஷம்,ரஜினிகாந்த்தும் உங்களுக்கு கன்னடர்களாக தெரிவது ஏனோ , இல்லை அப்படி ஒரு விஷத்தை மனதில் வைத்துதான் இத்தனை காலம் பழகுனீரா ??

உங்கள் படத்தில் ஒரு பாட்டு வரும் யார் யாரோ நண்பர் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு என்ற பாடல் வரிகளை இப்போது நினைக்க வைக்கிறது இந்த பதிவு..

பழம்பெரும் நடிகர் நாகேஷ்லாம் தமிழரில்லைனு இன்னைக்கு தான் பல பேருக்கே தெரியுது அதுவும் உங்கள் பதிவால்..

ரஜினிகாந்த் அவர்களை பிரித்து பேசும் கமல் அவர்களுக்கு என் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.ரஜினியை வைத்து அரசியல் செய்யாதீர்கள் கமல் அவர்களே.அரசியல் செய்ய எவ்ளோ வழிகள் இருக்கிறது..இதுவரை உங்களை பற்றி எதுவும் பேசாமல் அமைதியாய் இருப்பது அவருடைய பெருந்தன்மையயே காட்டுகிறது..

ரஜினி ரசிகர்களுக்கும் உங்களை ஒரு நடிகராய் பிடிக்கும் என்பதை மறவாதீர்..உங்களை எப்போதும் அவர்கள் மதித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.தற்போது உங்கள் பதிவால் அவர்களின் மனமும் புண்பட்டு இருக்கிறது.

முடிந்தால் (ரஜினி) அவரை களத்தில் சந்தியுங்கள்.அதைவிட்டு விட்டு நீங்களே இம்மாதிரியான செயல்களை செய்யலாமா கமல் சார் ???

-JSKகோபி

Leave a Response