வைகோவுடனான மோதல் குறித்து சீமான் கூறியதாவது…..
அந்த மோதல் பற்றிப் பேசவே விரும்பவில்லை. வைகோவை எதிர்ப்பதற்காக நான் கட்சியைத் தொடங்கிவில்லை. நான் எதிர்வினையாற்றினால், அவர்கள் யாருமே தாங்க மாட்டார்கள். எங்கள் தம்பிகளை அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கிறேன்.
மீம்ஸ் போட்டார்கள் எனக் கொதிக்கிறார் வைகோ. எனக்கு எதிராக சம்பளத்துக்கு ஆள் வைத்து மீம்ஸ் போட்டார்கள். எந்தெந்த கட்சி அப்படிச் செய்தது என எனக்குத் தெரியும்.
இதையெல்லாம் பொருட்படுத்துகிறவன் ஒரு போராட்டக்காரனாக களத்தில் நிற்க முடியாது. கல்லடிக்கே கலங்காதவன் நான், சொல்லடிக்கா கலங்கப் போகிறேன்…
அவர் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். `லட்சம் பேர் இருக்கிறார்கள்’ என்கிறார். அவர் நடத்திய ஊர்வலத்தில் ஐம்பது பேர்கூட உடன் நடக்கவில்லை. அவர் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். எனக்கு நண்பனாக இருப்பதைவிட எதிரியாக இருப்பதற்குத் தகுதி வேண்டும். அவரா என்னுடைய எதிரி…கடந்து போகட்டும் என நினைக்கிறேன்.
தொடர்ச்சியாக மிரட்டிக்கொண்டே இருந்தால் என்னுடைய ஆள் என்ன பண்ணுவான்னு எனக்கே தெரியாது. ரொம்பநாளாக அவர் பேசிக் கொண்டிருக்கிறார். என்னுடன் இருப்பவர்களுக்கு எது உண்மை…எது பொய் எனத் தெரியும்” என்றார்.
சீமானின் இந்தக் கருத்தைக் கேட்டு மதிமுகவினர் கொதித்துப் போய் சீமான் பற்றி பலவிதமாக விமர்சனம் செய்கின்றனர்.