கனடாவில் காவிரிக்காக கவன ஈர்ப்புப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் போராடிக்கொண்டிருக்கிரது. இப்போராட்டம் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
கனடா நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கு ஆதரவுக் குரல் எழுந்துள்ளது.

கனடாவில் ஏப்ரல் 7,2018 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அது தொடர்பான செய்திக்குறிப்பில்…

தமிழகத்தில் உரிமை மறுக்கப்பட்டு அறவழியில் தமது உரிமைகளை மீட்கப் போராடிக் கொண்டிருக்கும் குரல் இழந்த மக்களுக்கு குரல் கொடுக்கும் கனடா வாழ் தமிழர்களின் கூட்டு அமைப்பு சார்பாக உங்களுக்கு இந்த அழைப்பு. அரசியலுக்கு அப்பால் தமிழர் நலன் சார்ந்து இயங்குவதே நமது நோக்கு!

அந்த வகையில் காவிரி உரிமைக்காக தமிழ்நாட்டில் போராடி வரும் உறவுகளின் குரலை உலகின் முற்றத்துக்கு கொண்டு வரவும் அவர்களின் போராட்டம் வெற்றி பெற துணைநிற்கும் முகமாக
ஒரு கவன ஈர்ப்பு அறவழி போராட்டத்தை கனடா நாட்டில் இருக்கும் ரொரன்ரோ இந்தியத் தூதரகத்துக்கு எதிரே நடத்த உள்ளோம்.

குடும்பத்தோடு பங்கு பற்றி தமிழகத்தில் போராடும் உறவுகளின் வெற்றிக்கு வழிசமைக்க வரும்படி அன்புசார் அழைப்பு விடுகின்றோம். வாரீர் தமிழகத்தின் இருள் அகற்றும் ஒளிக் கீற்று ஆவீர்!
வாழ்க தமிழ்!

காலம்: சனிக்கிழமை (7.04.2018) மதியம் 12 மணிமுதல் 2 மணிவரை. இடம்: 365 Bloor St E , Toronto, ON M4W 3L4

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response