சீமானை விமர்சித்த வைகோவுக்கு நாம்தமிழரின் பதிலடி

மதுரை உசிலம்பட்டி அருகே மதிமுகவினர் ஏப்ரல் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டிருந்தபோது அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கும் நாம் தமிழர் கட்சியினர் சிலருக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஆண்டிப்பட்டியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அச்சம்பவம் குறித்தும், சீமான் குறித்தும் பேசினார்.

அப்போது, “நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு பேரணியின்போது இருசக்கர வாகனங்களில் வந்த நாம் தமிழர் கட்சியினர் சிலர் என்னருகே வந்து ‘வீரவணக்கம்’ என முழக்கமிட்டனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் தமிழரல்ல எனவும் தெலுங்கர் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பொது மேடைகளில் பெரியாரையும், அண்ணாவையும் சீமான் இழிவாகப் பேசி வருகிறார். பல ஆண்டுகளாக இவற்றையெல்லாம் நான் பொறுத்துக்கொண்டே இருந்தேன்.

நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட விவகாரங்களில் என்னுடைய போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலை தளங்களில் மீம்ஸ் போடுகின்றனர். இதனால், மக்கள் மத்தியில் என்னுடைய பெயர் கெட்டுப்போகிறது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வெறும் 8 நிமிடம் மட்டுமே தன்னைப் பார்க்க சீமானுக்கு அனுமதியளித்தார். ஆனால், பிரபாகரனுடன் வெகுகாலம் நட்பில் இருந்ததுபோல காட்டிக்கொள்கிறார் சீமான். பிரபாகரனுடன் சீமான் எடுத்ததாக உலா வரும் புகைப்படம் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டவை”

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

வைகோவின் இந்தக் கருத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் தென்மண்டலச் செயலாளர் ஆற்றியுள்ள எதிஎவினை…..

தங்களுக்கு என்ன பிரச்சனை. எதுதான் பிரச்சனை? கடந்த எட்டாண்டுகளாகவே பொறுத்துக் கொண்டிருக்கின்றேன். சகித்துக்கொண்டிருக்கின்றேன். ஆக நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்தே உங்களுக்கு பிரச்சனை.? ஒப்புக்கொள்கிறீர்கள்!

அடுத்து மீம்ஸ் தான் பிரச்சனையா? அதை தொடங்கி வைத்ததே உங்களின் ஆட்கள் தானே. நாம் தமிழர் கட்சியைப் பற்றியும், சீமானைப் பற்றியும் எத்தனை கீழ்த்தரமான மீம்ஸ்? தமிழர்கள் மண்ணில் பிழைப்பு நடத்திக்கொண்டு, அவர்களாலேயே சோறுண்டுகொண்டு அவர்களையே ‘டம்ளர்’ என்றீர்களே அது?

பொதுவாக எல்லா கட்சியினரும் மீம்ஸ்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் உங்களுக்கு அதுதான் பிரச்சனையா என்றால் இல்லை. நாம் தமிழர் கட்சியினர் மீதுதான்.

நாங்கள் அங்கே பெருங்கூட்டமாக கொடி பிடித்து கோஷம் போட்டுக்கொண்டு வந்தது பிரச்சனை. அது உங்கள் கண்களை, மனதை உறுத்தியிருப்பது தான் பிரச்சனை. அதே போன்று அவர்களும் அந்த மலை மேல் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதுதான் பிரச்சனை. அவர்கள் பங்கெடுத்து முன்வருவது தங்களுக்கு ஆகாத ஒன்றாக உள்ளது.

இது திடீரென மீம்ஸ் போட்டதால் வந்த பிரச்சனை என்பதை நம்ப முடியவில்லை. “திடீரென சில பேர் தமிழ் தேசியம்னு பேசிகிட்டு கிளம்பி வர்றாங்க. அவங்களை விடக்கூடாது. திராவிட கட்சிகள் எல்லாம் ஒன்னா சேர்ந்துடனும். திமுக- அதிமுக கட்சிக்குள்ள என்ன முரண்பாடு இரந்தாலும் ஒன்னா சேர்ந்து அவர்களை எதிர்க்கனும்” என்று பேசிய நாளில் இருந்தே உங்களுக்குள் ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை அறிய முடிந்து.

அது, எந்த விதத்திலும் தமிழர்கள் தமிழ் தேசியம் என பேசி எழுந்து வந்துவிடக்கூடாது. காலம் முழுதும் உங்களுக்கு கொடி பிடித்தே வாழ வேண்டும். நீங்கள் பார்த்து செய்தால் தான் தமிழனின் வாழ்வு. இல்லையா? நீங்கள் மட்டுமே அவர்களுக்காக! போராட பிறந்திருக்கிறீர்கள். தமிழர்கள் தமிழர்களுக்காக போராட முனையக்கூடாது.

அப்புறம் அந்த பெருங்காநல்லூர் போராட்ட வரலாற்றை அவ்வளவு விரிவா சொல்லி ‘மாட்டியிருக்க கூடாது’. பிரட்டிஸ்காரன் வந்து கள்ளர்களை ஒடுக்க நாய்க்கர்களிடம் ஆதரவு கேட்ட போது, ‘அவர்கள் எல்லாம் எங்களின் ஆடு மாடு, காடுகளை பார்த்துக்கொள்பவர்கள்’ என்று கூறி துணை போக மறத்து விட்டார்கள் என்றீர்களே. அங்கே நிற்கிறது உங்களின் ஆதிக்க புத்தி.

அதாவது தமிழர்கள் உங்களின் காடு கழனிகளில் கூலிகளாக, பண்ணை வேலையாட்களாக, ஆடு மாடு மேய்ப்பவர்களாக இருந்தவர்கள் என்பதை சொல்லி பெருமைபட்டுக் கொள்கிறீர்கள். அப்படியான தமிழர்கள் எழுச்சி பெற்று எழுந்து நிற்பதா என்ற ‘பிரச்சனை’ உங்களுக்கு தலைதூக்கி இருக்கிறது.

சிலர் திடீரென அந்த மலைமீது ஏறிக்கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள் என கூறுகிறீர்கள். அந்த சிலர் நாம் தமிழர்களாக இருப்பதுதான் உங்களுக்குப் பிரச்சனை. வேறு எந்த திராவிட கட்சிகளோ, இயக்கங்களோ என்றால் பிரச்சனை இல்லை. ஆக உங்களின் நோக்கம், தமிழர்களின் அழிவிற்காக தமிழர்களே போராட்டத்தை முன்னெடுக்கக்கூடாதுதான்.

நீங்களே போராட்டத்தை முன்னெடுப்பீர்கள். நீங்களே போட்டுவிட்டு போய் குப்புற படுத்துக்கொள்வீர்கள். திரும்ப மக்களே எழுந்து போராட வரும்போது கூடவே எழுந்து போராடி மடை மாற்றிவிட்டுப் போவீர்கள். அதில் மாற்றம் வரும்போது உங்களுக்கு ‘பிரச்சனை’ வந்துவிடுகிறது.

பிரபாகரன் படத்தை நீங்கள் பிடித்தால் புரட்சி. மற்றவர்கள் குறிப்பாக நாம் தமிழர்கள் பிடித்தால் பிச்சை எடுப்பு? நீங்கள் பேசினால் புரட்சி, நாம் தமிழர் கட்சி பேசினால் பண வசூல்? அப்படித்தானே. நாம் தமிழர கட்சியில் இருந்து வெளியேறிய அய்யநாதன் வசூல் பற்றி சொன்னதாக சொல்கிறீர்கள்.

அப்படி என்றால் உங்கள் கட்சியில் இருந்து பெரும் ஜாம்பாவன்கள் எல்லாம் ஒவ்வொருவராக வெளியேறிய போது சொன்ன குற்றச்சாட்டுகளை எல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் தானே? திமுக- அதிமுக-விடம் மாறி மாறி பணத்தை வாங்கி குவித்துக்கொண்டு கூட்டணி வைக்கிறீர்கள் என சொன்ன குற்றச்சாட்டையும் ஏற்கிறீர்கள்தானே?

உலகம் முழுதும் புலிகள் பெயரைச் சொல்லி கோடி கணக்கில் வசூல் செய்கிறார்கள் என்பது உண்மை என்றால், அதற்கு முன்பு 30 வருடங்களாக நீங்களும் வசூல் செய்தீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் தானே வைகோ சார். தான் ஆதிக்கம் செலுத்தும் தெருவில் புதியதாக ஒரு நாய் உள்ளே வந்தாலே போதும் விரட்டிச் சென்று கடித்துக் குதறிவிடும். அதைப்போல நீங்கள் இப்போது நாம் தமிழரை பார்க்கிறீர்கள்?!

தான் அதிகாரம் செய்துகொண்டுகொண்டு இருக்கும் இடத்தில் புதிதாக ஒருவன் வந்தால் விரட்டியடிக்கும் பழைய பிச்சைக்காரனைப் போல் நடந்து கொள்கிறீர்கள். நாம் தமிழர்கள் வியாபாரத்திற்காக, வசூலுக்காக உள்ளே வரவில்லை என்பதை அவர்களின் கடந்த காலம் நிரூபித்திருக்கிறது.

விடுதலைப் புலிகளைப் பற்றி, ஈழ விடுதலையைப் பற்றி நீங்கள் எப்போதெல்லாம் ‘வெடித்தீர்கள்’? எப்போதெல்லாம் போய் படுத்துக் கொண்டீர்கள்? என்பதை இந்த சமூகம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. 1998-ற்கு பிறகு 2007-வரை நீங்கள் எந்த அண்டர் கிரவுண்டில் இருந்தீர்கள். ஈழ இனப்படுகொலை உச்சத்தில் இருந்தபோது என்னென்ன செய்துகொண்டிருந்தீர்கள்? எல்லாவற்றையும் இளைஞர்கள் தோண்டி எடுத்து பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

இப்போது புலிகளின் கொடி, தலைவர் பிரபாகரன் பற்றி எல்லாம் இளைஞர்கள் பரவலாக பேசுகிறார்கள். அதற்கு காரணம் நாம் தமிழர் கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுதான் உங்கள் கண்களுக்கு, மனதிற்கு பிரச்சனையாக கிண்டுகிறது. நீங்களும் இதை பேசி வருகிறீர்கள். அந்தந்த கூட்டணி கட்சிகளுக்கு ஏற்ப பதுங்கி பாய்ந்தே ஈழப்பிரச்சனையை நகர்த்தினீர்கள். உண்மையா இல்லையா?

வாஜ்பாய் கூட்டணியில், பிறகு காங்கிரஸ் கூட்டணியில் துண்டி விரித்துக்கொண்டிருந்த போதெல்லாம் உங்களின் புலிப் பாய்ச்சலை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். இப்போதுகூட உங்கள் ஆதங்கள் நாம் தமிழர் கட்சியினர் புலிக்கொடியை தலைவர் பிரபாகரனை பரவலாக எடுத்து சென்றதுதான் பிரச்சனையாக தெரிகிறது. இந்த பக்கம் இளைஞர்கள் திரண்டு கொண்டிருப்ப தான் பிரச்சனையாக தெரிகிறது.

இப்படியாக உச்சகட்ட வெறியில் நிற்கிறீர்கள். பெரியாரை துணைக்கழைக்கிறீர்கள். நாய்க்கர்களை அழைக்கிறீர்கள். கூடவே மற்ற சமூகத்தவர்களையும் அழைக்கிறீர்கள். ஆக புது புது வேஷங்களை கட்டுகிறீக்ள். உங்கள் ஒற்றுமையை நாம் தமிழர் எங்கே வந்து குலைத்தது.

நாம் தமிழர் கட்சியா பெரியாரை ‘ஈ.வெ. இராமசாமி நாயக்கர்’ என்று குறிப்பிட்டு கேரள அரசுக்கு கடிதம் எழுதியது. பெரியாரை சாதி சொல்லி பாராட்டியது வைகோவா? சீமானா?

உங்கள் ஊரில் ஒரு பொது கோயில். அதற்கு உங்கள் குடும்பம் உதவியிருக்கிறது. அதற்கு உங்கள் குடும்பம் உதவியிருக்கிறது. அதையொட்டி கோயில் கல்வெட்டில் உங்கள் சகோதரர் உட்பட குடும்பத்தார் பெயரை எல்லாம் பொறித்திருக்கிறீர்கள். அனைவர் பெயரிலும் ‘நாய்க்கர்’ என சாதியை சேர்த்துக் கொண்டது வைகோவா? சீமானா?

நீங்கள், உங்கள் வாயால் ‘நாய்க்கர்’ பெருமை பேசிக்கொண்டால் சாதி பெருமை! மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் சாதி பழிப்பா? இது என்ன நியாயம் வைகோ சார். யார் சாதி வெறியோடு சுற்றுகிறார்கள்? என்பதை நீங்கள் கேரள அரசுக்கு பெரியார் குறித்து எழுதிய கடிதமும், உங்கள் ஊர் கோயிலில் உள்ள கல்வெட்டுமே சொல்லுமே.

வெளிநாட்டில் வசூல் என்ற ஆற்றாமை ஏன்? அது உண்மை என்றால் உங்களின் வசூல் வேட்டை குறைந்திருக்கிறது. அந்த ஆதங்கத்தை உடைக்கிறீர்கள். அதுதானே உண்மை? அடுத்து புலிகள், ஈழம் பற்றி பேசினால் பணம் கிடைக்கும் என்கிறீர்கள். அதாவது 30 ஆண்டு காலத்திற்கும் மேல் நீங்கள் வசூலித்திருக்கிறீர்கள். இப்போது நாம் தமிழர் வந்தது சிக்கலாகி நிற்கிறது.

தவிர இப்படி சொல்வதன் மூலம் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை, விடுதலை இயக்கத்தை, அவர்களின் போராட்டத்தை மிக மோசமாக கொச்சைபடுத்தியிருக்கிறீர்கள். அவமானப்படுத்துகீறீர்கள். கேவலப்படுத்தியிருக்கிறீர்கள். நீங்களும் மேலும் சிலரும் ‘நாம் தமிழர் கட்சியை ஆதரிக்காதீர்கள்’ ‘நதி தராதீர்கள்’ என எவ்வளவோ பிரச்சாரம் செய்து விட்டீர்கள். அப்படி இருக்கும் போது எப்படி நாம் தமிழர் கட்சிக்கு நிதி வரும்.

உங்களின் நோக்கம் புலிகள் இயக்கத்தை, அதன் தலைவரை, போராளிகளை, அவர்களின் விடுதலை தாகத்தை, புலம் தமிழர் முன்னெடுக்கும் அரசியலை எல்லாம் நாம் தமிழர் கட்சி பேசக்கூடாது. சீமான் பேசக்கூடாது. இளைஞர்களிடம் எடுத்துச் செல்லக்கூடாது. எட்டு நிமிடம் பார்த்தார் என்பதையோ, எட்டு வினாடி பார்த்தார் என்பதையோ பேசக்கூடாது.

கழுத்தில் குப்பியை கட்டிக்கொண்டு, புலிகள் உடையில் பயிற்சி எடுத்ததாய் நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் முக்கியமான தருணத்தில் அப்படியே விட்டுவிட்டு போய் கவுந்தபடி படுத்துக்கொள்ள வேண்டும். கழுத்தறுக்க வேண்டும். இதுதான் உங்களின் நோக்கம். இதில் மாற்றம் வரும்போது, உங்களுக்கு ‘பிரச்சனை’ வந்துவிடுகிறது.

2002- வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, நீங்களும் அங்கே செல்வாக்கில் இருந்தீர்கள். அப்போது புலிகள் யாழ்ப்பாண முற்றுகைப்போர் வெற்றிகரமாக நடந்தேறியது. 20, 000-த்திற்கும் மேலான சிங்கள ராணுவம் புலிகளிடம் சிக்கிக்கொண்டது. உடைத்துக்கொண்டு வெளியேற முடியவில்லை. இறங்கி அடித்தால் 20,000 ராணுவமும் காலி. விடுதலைப் புலிகளின் நோக்கம் அன்றே நிறைவேறியிருக்கும்.
ஆனால் என்ன நடந்தது. சிங்கள அரசு இந்திய-வாஜ்பாயிடம் கெஞ்சியது. வாஜ்பாய் அப்போது தமிழகத்தில் இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தியை அனுப்பி சமாதானம் பேசி, அப்படி ஏதும் செய்துவிடாதீர்கள். இந்தியா அதை கேட்டுக்கொள்கிறது என்றார். இந்தியாவை-இராணுவத்தை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்ற பிரபாகரன் அந்த முற்றுகையை தளர்த்தி 20,000 சிங்கள இராணுவத்தினரையும் விடுவித்தார். இந்த அயோக்கியத்தன செயல் நடந்து கொண்டிருந்த போது உங்களின் ரோல் என்ன? அப்போது வாஜ்பாய் புகழ்பாடிக்கொண்டிருந்த நீங்கள் செய்த ஒரு துரோகம் போதாதா?

சாதி துவேசம் பேசுகிறார்கள் என பெரியாரை இழுத்து, அதன் மூலம் திராவிட கட்சிகளை எல்லாம் துணைக்கழைத்து வருகிறீர்கள். நாம் தமிழர் கட்சி தெலுங்கர்களுக்கும் சட்டமன்ற வேட்பாளர் தொகுதி ஒதுக்கியதை, அவர்களையும் உள்வாங்கிக் கொண்ட அரசியலை மட்டும் கொண்டைக்குள் மறைத்துக் கொள்கிறீர்கள்.

முன்பு திருமுருகன் காந்தியை வைத்து இந்த ‘பிரச்சனையை’ செய்து பார்த்தீர்கள். அந்த திருமுருகனோ அம்பலப்பட்டு நிற்கிறார். இப்போது நீங்களே நேரடியாக களம் இறங்கியிருக்கிறீர்கள். மக்கள் செல்வாக்கை இழுந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.ஒரு லட்சம் பேர் எனக்காக இருக்கின்றான் என வன்முறைக்கு தூண்டுகிறீர்கள்.

எப்படியோ கடைசிவரை, ஸ்டெர்லைட் போராட்டத்தை விட்டுவிட்டு, மக்களின் மத்தியில் நிற்க வேண்டியதை விட்டுவிட்டு தேனி நியூட்ரினோ என்று ஏன் சென்றீர்கள் என்ற உண்மையை மட்டும் உடைக்காமலே விட்டுவிட்டீர்கள். அதே போன்று காவிரி சிக்கல், வாழ்வா சாவா போராட்டத்தை மடை மாற்ற, ஊடகங்களும், சமூக வலைதளங்களும் நேற்றிலிருந்து இதையே பேசு பொருளாக்கியிருக்கிறதே!அதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஆனாலும் நிரந்தரமல்ல.

மக்கள் காவிரி மேலாண்மை வேண்டிய போராட்டத்தையே முன்னெடுப்பார்கள். மேலும் தீரத்தோடு போராடுவார்கள். எந்த கொம்பனாலும் அதை மடை மாற்ற முடியாது என்பதையோ, நரி போட்ட ராஜா வேஷம் கலைந்துகொண்டிருக்கிறது என்பதையோ மறந்து போகாதீர்கள்


பொறியாளர்
செ. வெற்றிக்குமரன்
தென் மண்டலச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Response