வெள்ளிக்கிழமை (30-03-2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது.
அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….
1. அண்மையில் ஈரோட்டில் நடந்து முடிந்த திராவிட முன்னேற்றக் கழக மண்டல மாநாட்டுக்கு பாடுபாட்டு, உழைத்து பணியாற்றிய கழக முன்னணியினருக்கும், கழக தோழர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கின்றது.
2, நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்
3. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும்
4. நேர்மையற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்து மீண்டும் நடத்திட வேண்டும்
5. மருத்துவ கல்வி மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு கண்டனம்.
6. காவிரி பிரச்சனையில் நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத மத்திய – மாநில அரசுகளை கண்டிக்கின்ற தீர்மானம்
7. காவிரி பிரச்சினையில் கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கின்ற மத்திய – மாநில அரசுகளை கண்டித்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை எந்தவகையில் நடத்துவது என வரும் 1 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒத்த கருத்துடைய கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, முடிவெடுத்து அறிவிக்கும் அதிகாரத்தை செயல் தலைவர் ஸ்டாலினுக்கு வழங்குவது
அதுமட்டுமல்லாமல், மோடி தமிழகத்துக்கு வருகின்ற நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கறுப்பு கொடி காட்டுவதென்றும் முடிவு செய்திருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.