சீறும் பெண்புலி கலங்கும் மா.பா.பாண்டியராஜன்

இசைப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராகும் சகல தகுதிகளோடும் இருக்கும் தமிழிசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அந்தப் பதவிக்காக விண்ணப்பித்த நிலையில், புஷ்பவனம் குப்புசாமியை விடத் தகுதி குறைவான பிரமிளா குருமூர்த்தி என்பவருக்கு, விதிமுறைகளை மாற்றி அந்தப் பதவியை வழங்கியிருக்கிறது தமிழக அரசு.

இதுகுறித்து புஷ்பவனம்குப்புசாமியின் மனைவி அனிதாகுப்புசாமி எழுதியுள்ள பதிவில் பல விசயங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதில்….

சுதா ரகுநாதன் பேச்சைக் கேட்டு முடிவெடுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதலமைச்சர் பதில் சொல்லியே ஆகணும்…

இதைப்படித்து ஒருவர் என் கணவர் ஆசிரியப்பணி செய்யலேன்னு சொல்றாங்க…யார் சொன்னது? என் கணவர் 25 ஆண்டுகளுக்கு முன்னரே நவோதயா பள்ளியில் இசையாசிரியராகப் பணி செய்தார்.ஆன்லைன் டீச்சிங் இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார்.நான் நடத்திய பள்ளிக்கு நிர்வாக இயக்குநராக இருந்திருக்கிறார்.

அப்போ என்ன சொல்ல வர்றாங்க டீச்சிங் எக்ஸ்பீரியன்ஸ் ஒன்று மட்டும் போதும்னா அப்ளிகேஷனில் ஏன் அந்தத் தகுதி இந்தத் தகுதின்னு கேட்டாங்க.

அப்படியே மாஃபா பாண்டியராஜன் கேட்ட கர்நாக இசை என் கணவர் படிக்கவில்லையா? ஹரிகதா பண்ற ப்ரமீளாவுக்குக் குடுக்கலாம்.என் கணவர் எந்த விதத்தில் குறைந்து விட்டார்? மாஃபா கவலை அவருடைய தொழில் சிறந்து விளங்க வேண்டும்.அதில் தடையேதும் வரக் கூடாது.அதுக்காக அட்ஜெஸ்ட் பண்ணிட்டாரா?

சுதா ரகுநாதன் கடைசியில் நேரத்துல அந்தம்மாவுக்கு அதிக மார்க் போட்டுத் தேர்ந்தெடுத்துட்டாங்க.சி.ம் அதை ஓ.கே செய்துட்டார்னு மாஃபா என்னிடம் சொன்னதுக்கு அர்த்தம் என்ன? சுதா ரகுநாதன் தான் தமிழக அரசை இயக்குகிறாரா?

சுதா ரகுநாதனை நான் கேட்கிறேன்..நீங்கள் ஏன் அப்படி செய்தீர்கள்.உண்மையிலேயே 15 வருடங்கள் ஆராய்ச்சி செய்து படிச்சவங்களுக்கு வலி தெரியும்.நீங்க எல்லாம் நோகாமல் பட்டங்களும் விருதுகளும் வாங்கறவங்க தானே?எப்படிதான் இவர்களுக்கல்லாம் திறமை குறைவாக இருந்தாலும் சுலபமாக எல்லாம் கிடைத்து விடுகிறதோ?

சவால் விடறேன் சபாவைத் தாண்டி என் கணவருடன் யாராவது வந்து பாடத் தயாரா?எனக்கு சுதா ரகுநாதனும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத முதல்வரும் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் பதில் சொல்லாத வரை ஓயமாட்டேன்.

இவ்வாறு அவர் சொல்லியிருக்கிறார்.

வெளிப்படையாக அவர் இவ்வாறு சீறியிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் கலக்கம் அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response