‘பிக் பாஸ்’ ஜூலியின் துணிச்சலான முயற்சி..!


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமடைந்து வீரத் தமிழச்சி என்று அழைக்கப்பட்டவர் ஜூலி. இவரை ஜல்லிக்கட்டு ஜூலி என்றும் புகழ்ந்தனர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். அதனால் ஜூலியின் ஒவ்வொரு செயலையும் நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்

இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளார். இதற்கிடையில் விளம்பர படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ’உத்தமி’ படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து வரும் ஜூலியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் முரட்டுத்தனமாக கலாய்த்து வருகின்றனர்

முதல் படத்திலேயே கிழவியாக நடிக்க மேக்கப் போட்டுவிட்டதால் இனி அதார்கடுத்த வாய்ப்புகள் தனக்கு எப்படி அமையும் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், இந்த துணிச்சலான முயற்சியில் இறங்கிய ஜூலியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்..

Leave a Response